கொரோனா நிவாரணமாக ரேசன் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ. 4 ஆயிரம் - திமுக வாக்குறுதி

திமுக தேர்தல் அறிக்கை

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சொத்து வரி அதிகரிக்கப்படாது.

 • Share this:
  பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களுடன், திமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில் கொரோன பதிப்பு காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கான நிரவாரணம் வழங்கும் நோக்கில் பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.

  அதன்படி, கொரோனா தொற்று காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்த, அரிசி ரே‌ஷன் அட்டைதாரர்களுக்கு நிவாரண தொகையாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சொத்து வரி அதிகரிக்கப்படாது.

  கொரோனா நோய்த் தொற்று தீவிரமாக இருயத நேரத்தில் பணியில் இருயதபோது கொரோனா தொற்று தாக்கி உயிர் இழயத மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், நகராட்சி மற்றும் அரசு அலுவலர்கள், காவலர்கள் போன்ற முன்களப் பணியாளர்களின் குடும்பத்தார்க்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது.

  அத்துடன், மாவட்டத் தலைமை மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டு, ஸ்கேன் வசதி உள்ளிட்ட நவீன பரிசோதனைக் கூடங்கள், புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு, குழந்தையின்மை சிகிச்சைக்கான தனிப்பிரிவு, உயிர் காக்கும் உயர் சிகிச்சைப் பிரிவு ஆகியவை தொடங்கப்படுவதுடன், சிறுநீரகப் பாதிப்பிற்குள்ளான நோயாளிகளுக்கு இரத்தம் சுத்திகரிக்கவும், குறையத வருமானம் உள்ளவர்களுக்குக் குறைந்த செலவில் இரத்தம் மாற்றும் சிகிச்சைஅளிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

  மத்திய அரசை வலியுறுத்தி ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள் அமைக்க ஆவன செய்யப்படும். தமிழ்நாடு பிசியோதெரபி கவுன்சில் முழுமையாகச் செயல்பட நடவடிக்கை எடுப்பதுடன், அனைத்து வட்ட மருத்துவமனைகளிலும் இயன்முறை மருத்துவப் பிரிவு தொடங்கப்படும். ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்குப் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுப் பெரும் வரவேற்பைப் பெற்ற உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான “கலைஞர் காப்பீட்டுத் திட்டமும்”, “வருமுன் காப்போம் திட்டமும்” அ.தி.மு.க ஆட்சியில் பயனாளிகளுக்கு உரிய வகையில் பயனளிக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு பொதுமக்கள் மத்தியில் எழுயதுள்ளது. எனவே, இவ்விரண்டு திட்டங்களும் மீண்டும் முறைப்படுத்தப்பட்டு உயிர்க் கொல்லி நோய்களான மாரடைப்பு, புற்றுநோய், சிறுநீரகப் பாதிப்பு போன்ற நோய்களுக்கு இலவசச் சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

  திமுக தேர்தல் அறிக்கை முழுவிவரம்:   

  மேலும், சாலைவிபத்துகளுக்கும் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் உடனடி மருத்துவ வசதி கிடைத்திட ஏற்பாடுகள் செய்யப்படும். இத்திட்டத்தின் கீழ் மருத்துவ வசதி பெறுவோரின் நோய் மற்றும் மருத்துவ விவரங்கள் முறையாகப் பதிவுசெய்யப்பட்டு ஸ்மார்ட் கார்டு வடிவில் வழங்கப்படும்.” என்பது உற்றிட்ட பல்வேறு திட்டங்கள் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Suresh V
  First published: