'திமுகவுக்கு எந்த பி டீமும் தேவையில்லை. அதிமுகதான் பாஜகவுக்கு பி டீம்' - அமைச்சர் ஜெயக்குமாருக்கு பதிலளித்த கனிமொழி எம்.பி.,

கனிமொழி கருணாநிதி

சசிகலாவும், டிடிவி தினகரனும் திமுகவுக்கு பி டீமாக செயல்படுகிறார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.

  • Share this:
    திமுகவிற்கு எந்த பி டீமும் தேவையில்லை என்றும் அதிமுகதான் பாஜகவின் பி டீம் என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி கனிமொழி, ”கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அறிவித்த எந்தத் திட்டத்தையும் முடித்துத் தரவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் சசிகலா எங்கள் அம்மா என்றனர். இப்போது டெல்லியிலிருந்து என்ன சொல்கிறார்களோ அதைச் செய்கின்றனர். தரக்குறைவான விமர்சனத்தை வைக்கின்றனர்.




    அதிமுக.தான் பாஜக.வின் `பி' டீமாக இயங்குகிறது. திமுக.வுக்கு எந்த `பி' டீமும் தேவையில்லை. நாங்கள் நேரடியாக அரசியல் செய்யத் தெரிந்தவர்கள். திமுக.வில் தற்போதுள்ள கூட்டணி தொடரும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்”  எனக் கூறியுள்ளார்.


    மு.க அழகிரி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “மு.க.அழகிரி தொடர்பாக கருணாநிதியே ஒரு நிலைப்பாட்டை எடுத்துவிட்டார். அதைத்தாண்டி யாரும் நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய அவசியமில்லை. அவசியம் ஏற்பட்டால் ஸ்டாலின் எடுப்பார். மக்களிடம் ஸ்டாலின் மனுக்களைப் பெறத் தொடங்கிய பின்னரே போன் மூலம் புகார் தெரிவிக்கலாம் என முதல்வர் அறிவிக்கிறார்” என்றும் கூறியுள்ளார்.




    நான்கு ஆண்டு சிறைவாசத்துக்குப் பின் சென்னை திரும்பிய சசிகலா அதிமுக கொடியைப் பயன்படுத்தியதைக் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், “சசிகலாவுக்கும் திமுகவுக்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. சசிகலாவும், டிடிவி தினகரனும் திமுகவுக்கு பி டீமாக செயல்படுகிறார்கள்” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Published by:Gunavathy
    First published: