பரபரப்பான அரசியல் சூழலில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

மு.க.ஸ்டாலின்

மார்ச் 7ஆம் தேதி திருச்சியில் திமுகவின் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

 • Share this:
  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், காலை 9 மணி அளவில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற உள்ளது.

  தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

  பரபரப்பாக காணப்படும் இத்தகைய அரசியல் சூழலில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் இன்று (05-03-2021, வெள்ளிக்கிழமை) காலை 9 மணி அளவில், காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும்.

  அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள் / பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். மார்ச் 7ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டம் குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

  Must Read : திமுக - மதிமுக தொகுதி பங்கீடு பேசு்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை - மல்லை சத்யா

  தேர்தலுக்கு குறைந்த நாட்களே இருக்கும் நிலையில், இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகின்றது.
  Published by:Suresh V
  First published: