MK Stalin : திமுக ஆட்சி அமைக்கும் என கருத்து கணிப்புகள் வெளியான நிலையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

MK Stalin : திமுக ஆட்சி அமைக்கும் என கருத்து கணிப்புகள் வெளியான நிலையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    தமிழகத்தில் திமுக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள செய்தியில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெறுவதாக கூறியுள்ளார்.

    தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி, பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடிக்கும் என்று, தேர்தலுக்கு பிந்தைய பெரும்பான்மையான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. டைம்ஸ் நவ், இந்தியா டுடே, ஏ.பி.பி. நியூஸ் மற்றும் ரிபப்ளிக் டிவி உள்ளிட்ட நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில், திமுக கூட்டணி சராசரியாக 172 இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டு உள்ளது.

    அதேசமயம், ஆளும் அதிமுக 50 முதல் 60 இடங்களில் மட்டுமே வென்று ஆட்சியை இழக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், அமமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பிற கட்சிகள், 2 முதல் 4 இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    புதுச்சேரியை பொறுத்தவரை, காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு 11 முதல் 13 இடங்களும், பாஜ - என்ஆர் காங்கிரஸ் கூட்டணிக்கு 16 முதல் 20 இடங்களும் கிடைக்கும் என ரிபப்ளிக், சிஎன்எக்ஸ் கணித்துள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கு 8, பாஜக கூட்டணிக்கு 21 மற்றவைக்கு ஒரு இடம் கிடைக்குமென டைம்ஸ் நவ், சி ஓட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

    கேரளா, அசாம் மற்றும் மேற்குவங்க மாநிலங்களிலும் இந்தியா டுடே, ABP நியூஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் நடத்திய, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. 140 தொகுதிகளை கொண்ட கேரளாவில் தனிப்பெரும்பான்மையுடன் இடதுசாரிகள் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என, பெரும்பான்மையான கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

    Must Read : ஏழை நாடுகளில் வெறும் 0.3 சதவீத டோஸ் தடுப்பூசி மட்டுமே போடப்பட்டுள்ளன - உலக சுகாதார நிறுவனம் வருத்தம்

     

    126 தொகுதிகளை கொண்ட அசாமில் பாஜக கூட்டணி, மீண்டும் ஆட்சியை அமைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை அமைக்க வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டு உள்ளது.
    Published by:Suresh V
    First published: