திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் ஜூன் 26ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். அந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்குத் தயாராவது குறித்த விவாதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தமிழ்நாட்டில் கடந்த 2016ஆம் ஆண்டு நடத்தவேண்டிய உள்ளாட்சி தேர்தல் உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து 3 ஆண்டுகள் தாமதத்திற்குப் பிறகு 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது எனினும் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்ட ஊரகப் பகுதிகளுக்குத் தேர்தல் நடத்தப்படவில்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இது குறித்த வழக்கில் இந்த ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள வரும் ஜூன் 26ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 26 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.
திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Must Read : இந்தியாவில் டெல்டா பிளஸ் வகை கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆனையத்திற்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதால், தற்போது பணியில் உள்ள தனி அலுவலகர்களின் பதவி காலம் ஜுன் 30-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், உள்ளாட்சி அமைப்புகளின் தனி அலுவலர்களின் பதவி காலத்தை, இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கும் மசோதா தமிழக சட்டமன்றத்தில், குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் திமுக உள்ளாட்சி தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறுவது குறித்த வியூகங்களை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வகுக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anna Arivalayam, DMK, Durai murugan, MK Stalin