ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி சட்டப்பேரவை செயலரிடம் திமுக மனு!

ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி சட்டப்பேரவை செயலரிடம் திமுக மனு!
தங்க தமிழ்செல்வன்
  • News18 Tamil
  • Last Updated: February 27, 2020, 10:28 AM IST
  • Share this:
ஓ.பி.எஸ்., உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை உடனடியாக தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என சட்டப்பேரவைச் செயலாளரிடம் திமுக மனு அளித்துள்ளது.

இது குறித்து தங்க தமிழ்ச்செல்வன் கூறுகையில்,”11 எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தொடர்பாக 3 ஆண்டுகளாக சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை; இந்த ஆட்சி நிறைவடைய இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தல்படி அவர்களை உடனடியாக தகுதி நீக்கம் செய்யும்படி சபாநாயகரிடம் கோரிக்கை வைத்து உள்ளதாகக் கூறினார்.

மேலும், சபாநாயகர் நடவடிக்கை எடுப்பார் என்று உச்சநீதிமன்றம் வழக்கை முடித்து வைத்துள்ளது. எனவே, அதன் அடிப்படையில் சபாநாயகர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கை புண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லை. சபாநாயகர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம்” என்றும் அவர் தெரிவித்தார்.


Also see:
First published: February 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading