முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சரிந்து விழுந்த திமுக அலங்கார வளைவு... நொடியில் தப்பிய வாகனங்கள்...! - வீடியோ

சரிந்து விழுந்த திமுக அலங்கார வளைவு... நொடியில் தப்பிய வாகனங்கள்...! - வீடியோ

திமுகவினர் வைத்த அலங்கார வளைவு

திமுகவினர் வைத்த அலங்கார வளைவு

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

சென்னையில் அதிமுக பேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த நிலையில், விக்கிரவாண்டியில் திமுகவின் அலங்கார வளைவு சாலையில் சரிந்து விழுந்தது.

சென்னை பள்ளிக்கரணையில் அதிமுக பிரமுகர் ஜெயகோபால் வைத்திருந்த பேனர் விழுந்ததால் ஸ்கூட்டியில் சென்ற இளம்பெண் சுபஸ்ரீ, நிலைதடுமாறி சாலையில் விழ பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறியது.

இந்த கோர விபத்தில் சுபஸ்ரீ உயிரிழந்தார். இதனை அடுத்து, தமிழகம் முழுவதும் பேனர்கள் வைக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. நீதிமன்றமும் இந்த விவகாரத்தில் கடுகடுப்பு காட்ட நீண்ட தேடுதலுக்குப் பின்னர் அதிமுக பிரமுகர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டார்.

திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட அரசியல் கட்சியனரும் விதிமுறைகளை மீறி பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தங்களது கட்சியினருக்கு அறிவுரை வழங்கினர்.

இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் இன்று நடக்கும் நிலையில், சில வாரங்களாக அங்கு பிரசார பணிகள் நடந்தன.

விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட துறையூர் வழுதாவூர் சாலையில் திமுக சார்பில் அலங்கார வரவேற்பு வளைவு வைக்கப்பட்டிருந்தது.

இந்த அலங்கார வளைவு சரிந்து விழும் காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகின்றன. அலங்கார வளைவு சரியும் போது, ஒரு கார் அதனை கடந்திருக்கும். சில நொடிகள் தாமதித்திருந்தால் கார் மீது அலங்கார வளைவு விழுந்து பெரிய விபத்தாக மாறியிருக்கும்.

மேலும், வீடியோவில் கீழே விழுந்த வளைவில் பைக் ஒன்று சிக்கியுள்ளதாக ஒருவர் கூறுவது பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Also See...

First published:

Tags: Banners, ByElection 2019, DMK