தி.மு.க ஆட்சிக்கு வரக்கூடாது என்று மத்திய அரசு செயல்படுகிறது! மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

”நம்மிடம் ஒற்றுமை இல்லாமல், என்ன உழைத்தாலும் வெற்றி கிடைக்காது. தி.மு.க செய்த சாதனையை இனி யாராலும் செய்ய இயலாது”

தி.மு.க ஆட்சிக்கு வரக்கூடாது என்று மத்திய அரசு செயல்படுகிறது! மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
முக ஸ்டாலின்
  • News18
  • Last Updated: November 10, 2019, 4:23 PM IST
  • Share this:
தி.மு.க ஆட்சிக்கு வரக்கூடாது என்று மாநில அரசு மட்டுமல்ல மத்திய அரசும் தீவிரமாக செயல்பட்டுவருகிறது என்று அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், தி.மு.கவின் பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். அந்த பொதுக்குழுக் கூட்டத்தில் சில முக்கியத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. முக்கியமாக, வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் உறுப்பினராக, திருநங்கைகள் உறுப்பினராக விதித்திருத்தம் கொண்டுவரப்பட்டது.

கட்சி நிர்வாகிகளை நீக்க, சேர்க்க அக்கட்சியின் பொதுச் செயலாளருக்கு இருந்த அதிகாரம் தலைவருக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், ‘தி.மு.க ஆட்சிக்கு வரக்கூடாது என மாநில அரசு மட்டுமல்ல மத்தியரசும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. வெற்றி சாதாரணமாகக் கிடைக்காது. கிடைக்கவும் விட மாட்டார்கள்.


நம்மிடம் ஒற்றுமை இல்லாமல், என்ன உழைத்தாலும் வெற்றி கிடைக்காது. தி.மு.க செய்த சாதனையை இனி யாராலும் செய்ய இயலாது. அமைச்சர்கள் செலவு செய்து அதிகாரத்தைப் பயன்படுத்தி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றனர். மாவட்டச் செயலாளர்கள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் முரசொலி அலுவகத்துக்கு பூட்டு போட வேண்டும் என்று பொன் ராதாகிருஷ்ணன் கூறுகிறார். பூட்டு போட விட்டு விடுவோமா?

இனி வரும் காலம் தி.மு.கவிற்கு சவாலான காலம். சவாலைச் சமாளிக்கத் தயாராக இருக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க வெற்றி பெறக் கூடாது என மாநில அரசும், மத்திய அரசும் பல்வேறு சதித் திட்டங்களைத் தீட்டி, தி.மு.கவின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட நினைத்தனர்’ என்று தெரிவித்தார்.

Also see:
First published: November 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்