முகப்பு /செய்தி /தமிழ்நாடு / TN Election Results 2021 : சென்னையை மொத்தமாக இழக்கிறதா அதிமுக? 16 தொகுதியிலும் திமுக தொடர்ந்து முன்னிலை

TN Election Results 2021 : சென்னையை மொத்தமாக இழக்கிறதா அதிமுக? 16 தொகுதியிலும் திமுக தொடர்ந்து முன்னிலை

எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின்

எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின்

சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் திமுக மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலையில் இருந்து வருகிறார்கள். இதனால் அதிமுகவினர் கலக்கத்தில் இருப்பதாக கூறப்படுகின்றது.

  • Last Updated :

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் திமுக மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலையில் இருந்து வருகிறார்கள்.

இதுவரை நடந்து முடிந்த சுற்றுகளில் திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. அதன்படி தற்போதய நிலவரப்படி, திமுக கூட்டணி கட்சிகள் 144 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 89 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில், சென்னையில் உள்ள தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தொர்ந்து முன்னிலையில் இருந்து வருகின்றனர்.

இந்த முறை மொத்தமாக 16 தொகுதிகளில் திமுக கூட்டணிதான் முன்னிலை வகிக்கிறது. சென்னையில் உள்ள அண்ணா நகர், சேப்பாக்கம் , ஆர். கே நகர், எக்மோர், துறைமுகம், கொளத்தூர், மைலாப்பூரில் திமுக கூட்டணி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தொடக்கத்தில் இருந்தே முன்னிலை வகித்து வருகிறது.

அதன்படி, சென்னையில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் மு.க.ஸ்டாலின், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் என முக்கிய வேட்பாளர்கள் அனைவரும் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுக அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர். தொடர்ந்து எண்ணப்பட்டு வரும் வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள், சென்னையில் அதிமுக முன்னிலை பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Must Read : தமிழகத்தின் பெரும்பாலான தொகுதிகளில் நாம் தமிழர் கட்சிக்கு 3-வது இடம்

top videos

    சென்னையில் உள்ள 16 தொகுதிகளில், கடந்த தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: ADMK, Chennai, DMK Alliance, TN Assembly Election 2021