படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் சரஸ்வதி குடும்பத்தினரை சந்தித்து திமுகவினர் ஆறுதல் - தம்பி, தங்கை படிப்பு செலவை ஏற்றுக் கொள்வதாக உறுதி

சரஸ்வதிகுடும்பத்திற்கு ஆறுதல் கூறிய திமுக-வினர்...

உளுந்தூர்பேட்டை அருகே கழுத்தை நெறித்து படுகொலை செய்யப்பட்ட சரஸ்வதி குடும்பத்தினருக்கு கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட தி.மு.க  வினர் நேரில்  சென்று ஆறுதல் கூறினர். மேலும் சரஸ்வதியின் தம்பி,  தங்கை படிப்பு செலவை மாவட்ட தி.மு.க ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தனர்.

 • Share this:
  கடந்த மாதம் 2-ஆம் தேதி அன்று உளுந்தூர்பேட்டையை அடுத்துள்ள தேவியநந்தல்  கிராமத்தில் செவிலியர் பட்டய படிப்பு பயின்ற சரஸ்வதி என்ற 18-வயது பெண் அவரை காதலித்ததாக கூறப்படும் ரங்கசாமி  என்ற இளைஞரால் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டார்.

  இந்த சம்பவம் குறித்து  தகவல் அறிந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி,  கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளரும், சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான தா.உதயசூரியன் மற்றும் உளுந்தூர்பேட்டை தொகுதி தி.மு.க வேட்பாளர் A. J. மணிக்கண்ணன் உள்ளிட்ட தி.மு.கவினர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நேரில் சென்று  ஆறுதல் கூறினர்.

  மேலும் படிக்க... காதலியின் கழுத்தை நெரித்து கொலை செய்த காதலன்.. அதிர்ச்சி பின்னணி

  இதனை தொடர்ந்து  தி.மு.க மாவட்ட பொறுப்புக்குழு  உறுப்பினர் ஜெயராமன், உளுந்தூர்பேட்டை பேரூர் கழக செயலாளர் டேனியல் ராஜ், சங்கராபுரம் பேரூர்கழக செயலாளர் துரை தாகப்பிள்ளை , திருவெண்னை நல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் இளைஞரணி நிர்வாகி அருள் உள்ளிட்ட தி.மு.க வினர் சரஸ்வதியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி ரூ 50,000 நிதி உதவி வழங்கினர். மேலும் சரஸ்வதியின் தம்பி, தங்கை ஆகிய இருவரின் கல்வி செலவை கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட தி.மு.க வே ஏற்றுக் கொள்ளும் எனவும் சரஸ்வதியின் குடும்பத்தினரிடம் தெரிவித்தனர்.

  செய்தியாளார்: எஸ்.செந்தில்குமார், கள்ளக்குறிச்சி  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: