Home /News /tamil-nadu /

தொகுதிப் பங்கீடு பற்றி விரைவில் அறிவிப்பு: ராகுல் காந்தியைச் சந்தித்தப் பின் திருநாவுக்கரசர் அறிவிப்பு

தொகுதிப் பங்கீடு பற்றி விரைவில் அறிவிப்பு: ராகுல் காந்தியைச் சந்தித்தப் பின் திருநாவுக்கரசர் அறிவிப்பு

திருநாவுக்கரசர்

திருநாவுக்கரசர்

தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளது. இன்று, அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க இடம் பெற்றுள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    தி.மு.க, காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றுவருகிறது. தொகுதிப் பங்கீடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

    மக்களவைத் தேர்தலுக்கு நாள் நெருங்க, நெருங்க தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக இயங்கிவருகின்றன. குறிப்பாக, தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளது. இன்று, அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க இடம் பெற்றுள்ளது.

    பா.ம.கவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பா.ம.கவுடன் பேச்சுவார்த்தை முடிந்த கையோடு, பா.ஜ.கவுடன் அ.தி.மு.க கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. இந்தநிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர்கள், டெல்லி சென்று ராகுல் காந்தியுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

    ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், ‘பா.ஜ.க, அ.தி.மு.க கூட்டணி மூழ்கும் கப்பல். அந்தக் கூட்டணியில் சேரும் கட்சிகள் அனைத்தும் தோல்வியடையும். அ.தி.மு.க, பா.மக கூட்டணி கட்டாயத் திருமணம் போன்றது. அதனால், அவசர அவசரமாக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

    கட்டாயத் திருமணம் அவசர அவசரமாகத் தான் நடைபெறும். காங்கிரஸ், தி.மு.க உறவு நன்றாக உள்ளது. விரைவில் தொகுதிப் பங்கீடு குறித்து அறிவிக்கப்படும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கும் அ.தி.மு.கவை திராவிடக் கட்சி இல்லை என்று ராமதாஸ் முடிவெடுத்துவிட்டார்.

    தி.மு.க, காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமான நிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சியில் உள்ள அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று ராகுல் காந்தி கூறினார். தமிழகத்தில் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு ராகுல் காந்தி வருவார். பிரியங்கா காந்தியையும் பிரச்சாரத்துக்கு அழைப்போம்’ என்று தெரிவித்தார்.

    Also see:

    Published by:Karthick S
    First published:

    Tags: Lok Sabha Election 2019, Thirunavukkarasar

    அடுத்த செய்தி