முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக-காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு

ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக-காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு

பச்சை தலைப்பாகை கட்டி வந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள்.

பச்சை தலைப்பாகை கட்டி வந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள்.

வேளாண் சீர்திருத்த சட்டங்களை திரும்பப்பெறும் வரை கூட்டத்தொடரில் பங்கேற்க போவதில்லை என அறிவிப்பு.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சென்னை கலைவாணர் அரங்கில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் காலை 11 மணிக்குத் தொடங்கியது. இதில் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில், கூட்டம் தொடங்கியதும் திமுக உறுப்பினர்கள் அமலியில் ஈடுபட்டனர். அப்போது, இது முறையல்ல என்று ஆளுநர் கூறினார். இதனைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் ஆளுநர் உரையை புறக்கணித்து சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, ஆளுநர் உரையை புறக்கணித்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில், வேளாண் சீர்திருத்த சட்டங்களை திரும்பப்பெறும் வரை கூட்டத்தொடரில் பங்கேற்கப் போவதில்லை என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க... ஆளுநர் உரையுடன் தொடங்கியது தமிழக சட்டப்பேரவை கூட்டம்

இதேபோல, எதிர்க்கட்சிகள் அனைத்தும் இந்த கூட்டத்தொடரை முழுவதுமாக புறக்கணிப்பதாக தெரிவித்திருக்கின்றன. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக தலையில் பச்சை தலைப்பாகை கட்டி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Congress, DMK, TN Assembly