திமுக - காங்கிரஸ் இணைய வேண்டும்: ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

ஜவாஹிருல்லா

 • News18
 • Last Updated :
 • Share this:
  அரசியல் சாசன சட்டத்தை காப்பாற்ற ஓரணியில் திரள வேண்டும் என திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா அழைப்பு விடுத்துள்ளார்.

  திருச்சி நாவலூர் பகுதியில் உள்ள மீரான் முஹைதீன் மைதானத்தில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில், திமுக  துணை பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர்  பங்கேற்றனர். மாநாட்டில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்தியாவின் அரசியமைப்பு சட்டத்தையும், தேசிய கொடியையும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஒருபோதும் மதித்தது இல்லை என குற்றம்சாட்டினார். பாகிஸ்தான் தனி நாடாக பிரிந்து சென்றதற்கு காரணம் இஸ்லாமியர்கள் இல்லை, ஆர்.எஸ்.எஸ்.தான் என்றும் அவர் தெரிவித்தார்.

  இதையடுத்து உரையாற்றிய  புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, நாடு முழுவதும் திட்டமிட்ட வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதற்கான மாற்றம் வரும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மாநிலங்களின் உரிமைகளை ஏற்றுக் கொண்டதாக அரசியலமைப்பு சட்டம் அமைய வேண்டும் என அறிஞர் அண்ணா பேசியதை சுட்டிக்காட்டினார்.

  மாநாட்டின் இறுதியில் உரையாற்றிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, அரசியல் சாசன சட்டத்தை காப்பாற்ற வேண்டும் என்றால், அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என மேடையில் இருந்த அரசியல் கட்சி தலைவர்களை நோக்கி வலியுறுத்தினார். முன்னதாக சட்டமியற்றும் அவைகளில் இஸ்லாமியர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும், மாநிலங்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும், முத்தலாக் அவசர சட்டத்தை  திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  Published by:Vaijayanthi S
  First published: