தேர்தல் மேலிட பார்வையாளர் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆலோசனை நடத்தும் நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு இடப்பங்கீடு இன்று முடிவு செய்யப்படும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்
திமுக கூட்டணியில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் எத்தனை இடங்களில் போட்டியிடுகிறது என்பது பற்றியும் வேட்பாளர்கள் பட்டியல் குறித்த விவரங்களும் இன்று முடிவு செய்யப்பட உள்ளது.
சென்னை சத்தியமூர்த்தி பவனில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து தேர்தல் மேலிட பார்வையாளர் ரமேஷ் சென்னிதாலா தலைமையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சிரிவல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கு.செல்வபெருந்தகை எம்.எல்.ஏ ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இடப்பங்கீடு சுமுகமாக முடிவடைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் இடப்பங்கீடு இழுப்பறியில் உள்ளது.
Must Read : ‘பாஜகவை பற்றி தவறாக பேசக்கூடாது என்று கூறுகிறார் சீமான்...’ கூண்டோடு ராஜினாமா செய்து திமுகவில் இணைந்த நிர்வாகிகள்
காங்கிரஸ் தரப்பில் 20 வார்டு வரை கேட்கப்படுகிறது. சென்னையில் காங்கிரஸ் கட்சிக்கு, திமுக தரப்பில் 14 வார்டு தர முன் வந்துள்ளதாக தெரிகிறது. எனினும் கூடுதலான வார்டுகளை காங்கிரஸ் கேட்டு வருகிறது. இதனால், இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நீடித்து வருகிறது.
Read More : Union Budget 2022 Highlights மத்திய பட்ஜெட்- முக்கிய அறிவிப்புகள்
இருப்பினும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு இடப்பங்கீடு இன்று முடிவடையும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.