தி.மு.க, காங்கிரஸுக்கு ஊழலைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது - அமித்ஷா காட்டம்

தி.மு.க, காங்கிஸூக்கு ஊழலைப் பற்றி பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சனம் செய்துள்ளார்.

தி.மு.க, காங்கிரஸுக்கு ஊழலைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது - அமித்ஷா காட்டம்
அமித்ஷா
  • Share this:
சென்னை சேப்பாக்கத்திலுள்ள கலைவாணர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்தார். அதன்பிறகு பேசிய அவர், ‘நரேந்திர மோடி அரசியல் களத்திற்கு வந்த பிறகு 3 முக்கிய விஷயங்களை எதிர்த்தார். ஊழல்வாதம், பரம்பரைவாதம்(குடும்ப அரசியல்), சாதியவாதம். குடும்ப அரசியலை இங்கே நடத்தி வரும் சிலர், நாடு முழுவதும் அதை செயல்படுத்த நினைக்கின்றனர். இந்தியாவின் பல பகுதிகளில் குடும்ப அரசியலை விரட்டி அடித்தது போல் தமிழகத்திலும் விரட்டி அடிப்போம் என்பதை அடித்துச் சொல்கிறேன். ஊழலைப் பற்றி பேச உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது? நீண்ட நாட்களுக்கு பின்னர் சென்னை வந்திருக்கிறேன். அதனால் அரசியல் பேசலாம் என நினைக்கிறேன். தி.மு.க தலைவர்கள் மத்திய அரசு துரோகம் இழைத்தது என குற்றம் சாட்டுகிறார்கள்.

நீங்கள் 10 ஆண்டு காலம் மத்தியில் அங்கம் வகித்தீர்களே தமிழ்நாட்டுற்கு என்ன செய்தீர்கள்? நாங்கள் என்ன செய்தோம் என்று என்னால் பட்டியல் இட்டுச் சொல்ல முடியும்? கொரோனா காலத்தில் மிகச் சிறப்பான பணியை தமிழக அரசு செய்து வருகிறது. முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் என் பாரட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். உலகத்தின் தொன்மையான மொழியான தமிழில் என்னால் உரையாற்ற முடியாது. ஏனென்றால் எனக்கு தமிழ் தெரியாது.

அதற்காக என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். குடும்ப அரசியல் நடத்தி வரும் சில கட்சிகளுக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டி வருகிறார்கள். அதே பாடம் தமிழகத்திலும் புகட்டப்படும் என நம்புகிறேன். காங்கிரஸ் - திமுகவுக்கு ஊழலுக்கு எதிராக பேச என்ன அதிகாரம் உள்ளது. 2ஜி மட்டும் அல்லாமல் பல்வேறு ஊழல்களை செய்தவர்கள். ஊழல் குற்றச்சாட்டை நீங்கள் வைக்கும் முன் உங்கள் குடும்பத்தை திரும்பி பார்க்க வேண்டும். ஏழைகளின் நலனில் மோடி அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.


தமிழக மீனவர்கள் அச்சம் இல்லாமல் இருக்கிறார்கள். உலக நாடுகள் இந்தியாவை பார்க்கும் கண்ணோட்டத்தையே மோடி மாற்றியுள்ளார். யாழ்ப்பாணம் சென்ற மோடி 50 ஆயிரம் நபர்களுக்கு வீடுகளை கட்டித்தர நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். நம்முடைய பாதுகாப்பு படையினர் 4 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றுள்ளனர். அவர்களின் தியாகங்களுக்கு தலைவணங்குகிறேன்’ என்று தெரிவித்தார்.
First published: November 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading