வாக்குச் சாவடிகளை கைப்பற்ற அதிமுக ரகசிய திட்டம் - திமுக திடீர் புகார்

வாக்குச் சாவடிகளை கைப்பற்ற அதிமுக ரகசிய திட்டம் - திமுக திடீர் புகார்
கோப்பு படம்
  • News18
  • Last Updated: April 18, 2019, 4:05 PM IST
  • Share this:
மாலை 3.30 மணிக்கு மேல் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற அதிமுக திட்டமிட்டிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகிறார்கள்.


தற்போது வரை அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், “மாலை 3.30 மணிக்கு மேல் தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச் சாவடிகளை அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

காவல்துறையினர் பாதுகாப்பு மனுவை திரும்ப பெற திட்டமிட்டுள்ளதாகவும், வாக்குச் சாவடிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை அந்த நேரத்தில் செயலிழக்கச் செய்யப்போவதாகவும் தகவல் வந்துள்ளது.

இதன்மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும், நியாயமான மற்றும் வெளிப்படையான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்திட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

வீடியோ: கடலூர் தொகுதியில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் அமமுக வேட்பாளருக்கு பட்டன் இல்லை!

First published: April 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்