தி.மு.கவினர் சட்டையைக் கிழியுங்கள்! அமைச்சர் மீது டி.ஜி.பி அலுவலகத்தில் புகார்

ராஜேந்திர பாலாஜி (கோப்பு படம்)

தி.மு.கவினர் உங்கள் சட்டையை தொட்டால் நீங்கள் அவர்களது சட்டையைக் கிழிக்கவேண்டும். தி.மு.கவினர் நம் வீட்டுக் கதவைத் தட்டினால், நாம் தி.மு.க வீட்டு கதவுகளை உடைக்கவேண்டும் - ராஜேந்திர பாலாஜி

  • News18
  • Last Updated :
  • Share this:
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தி.மு.க சார்பில் டி.ஜி.பி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்கு அ.தி.மு.க சார்பில் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ‘உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெறுவதற்கு எல்லா சித்துவேலைகளையும் செய்யவேண்டும். தி.மு.கவினர் உங்கள் சட்டையை தொட்டால் நீங்கள் அவர்களது சட்டையைக் கிழிக்கவேண்டும். தி.மு.கவினர் நம் வீட்டுக் கதவைத் தட்டினால், நாம் தி.மு.க வீட்டு கதவுகளை உடைக்கவேண்டும். எந்தப் பிரச்னை வந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று வன்முறையைத் தூண்டும் வகையில் பேசினார்.


அவர், பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது. இந்தநிலையில், வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தி.மு.க சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாநிலத் தேர்தல் ஆணையத்திலும் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Also see:

Published by:Karthick S
First published: