மதுரையில் விதிமீறி ஒளிபரப்பப்பட்ட ’வெற்றி நடை போடும் தமிழகமே’ பாடல் - தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க புகார்

மதுரையில் விதிமீறி ஒளிபரப்பப்பட்ட ’வெற்றி நடை போடும் தமிழகமே’ பாடல் - தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க புகார்

புகார் தெரிவிக்கும் தி.மு.க

மதுரையில் விதிமுறைகளை மீறி வெற்றிநடை போடும் தமிழகம் பாடல் ஒளிபரப்பப்பட்டதாக தி.மு.க புகார் அளித்துள்ளது.

  • Share this:
மதுரையிலுள்ள திரையரங்கில் தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி அரசின் "வெற்றி நடைபோடும் தமிழகமே" விளம்பரம் பாடல் ஒளிபரப்பப் பட்டதாக தி.மு.க சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்த விளம்பரத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்க செய்தி மற்றும் விளம்பரத் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மதுரை காளவாசல் பகுதியில் இயங்கி வரும் பிரபல குரு திரையரங்கில் நேற்று மாலை 6:30 மணிக்கு அரசு சார்பில் தயாரிக்கப்பட்ட "வெற்றி நடை போடும்" தமிழகமே பிரச்சார பாடல் ஒளிபரப்பப்பட்டு உள்ளது. தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறியுள்ளதாக கூறி தி.மு.கவின் மதுரை தெற்கு மாநகர் நெசவாளர் அணி அமைப்பாளர் வெள்ளைத்துரை மத்திய தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கோட்டூர்சாமியிடம் புகார் மனு அளித்துள்ளார்.

அதில், தேர்தல் நடத்தை விதி அமலில் இருக்கும் போது அதனை மீறி இந்த விளம்பரம் ஒளிபரப்பப்பட்டு உள்ளதாகவும், செய்தி மற்றும் விளம்பர துறை இயக்குநர் மீதும், குரு தியேட்டர் மீதும் நடவடிக்கை சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பிட்டு இருந்தார்.

இந்த புகார் குறித்து, அரசின் செய்தி மற்றும் விளம்பர துறை இயக்குனருக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் வாயிலாக தெரியப்படுத்தி உள்ளதாகவும், விளம்பரத்தை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் மாவட்ட தேர்தல் துணை அலுவலர் செந்தில்குமாரி தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும், இதனை தொடர்ந்து அனைத்து திரையரங்குகளிலும் விளம்பரம் ஒளிபரப்பாகிறதா என கண்காணித்து உடனடியாக நிறுத்த உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: