• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யவேண்டும்: ஆளுநரிடம் ஸ்டாலின் வலியுறுத்தல்..

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யவேண்டும்: ஆளுநரிடம் ஸ்டாலின் வலியுறுத்தல்..

“சட்டரீதியாக மட்டுமல்லாமல், மனிதாபிமான முறையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநரை சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.

  • Share this:
    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி திமுக தலைவர் ஸ்டாலின்,பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர், ராஜ் பவனில் இன்று ஆளுநரை சந்தித்தனர்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின், “  பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் 29 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இவர்களை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். சட்டரீதியாக மனிதாபிமான அடிப்படையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். ஆளுநர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

    மேலும் படிக்க..டெல்லி உள்ளிட்ட 5 மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை.. எச்சரிக்கும் உச்சநீதிமன்றம்..



    அதிமுக ஆட்சி காலத்தில் தர்மபுரியில் தீயில் எரித்து கொன்றவர்களை விடுதலை செய்துள்ளது. அதை கோடிட்டு காட்டி பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும். பேரறிவாளன் தாயார் தன்னந்தனியாக போராடி கொண்டு உள்ளார் ஆளுநர் உடனடியாக பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்”  என அவர் தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: