• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 1400 இஸ்லாமிய மக்களுக்கு ரமலான் பரிசுப் பொருட்கள் வழங்கிய மு.க.ஸ்டாலின்!

1400 இஸ்லாமிய மக்களுக்கு ரமலான் பரிசுப் பொருட்கள் வழங்கிய மு.க.ஸ்டாலின்!

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

  • Last Updated :
  • Share this:
    புனித ரமலான் பண்டிகையை முன்னிட்டு 1400 சிறுபான்மை இஸ்லாமிய பெருமக்களுக்கு பெருநாள் பரிசு மற்றும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்டவைகளை திமுக தலைவர் ஸ்டாலின் வழங்கினார்.

    சென்னை கொளத்தூர் பகுதியில் உள்ள திருவள்ளுவர் மண்டபத்தில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு சிறுபான்மை இஸ்லாம் மக்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது, இதில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி, ரமலான் வாழ்த்துகளை தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘‘புனித ரமலான் பண்டிகைக்காக இஸ்லாமியர்களுக்கு ஆண்டுதோறும் பரிசுப்பொருட்கள் வழங்க வருகிறோம். இந்தாண்டு நடந்து முடிந்த தேர்தலில் திமுகவை மிகப்பெரிய வெற்றி பெற வைத்ததற்கு நன்றி.

    நடைபெற்ற தேர்தல் மூலம் மதவெறி பிடித்தவர்களுக்கும், மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்கும், மதம் மூலம் பிரிக்க நினைப்பவர்களுக்கும் தமிழகத்தில் இடமில்லை என்பதை தமிழக மக்கள் நிரூபித்துள்ளார்கள்.

    அனைத்து வருடமும் உற்சாகத்துடனும் ஒற்றுமையோடும் ஒருமித்த கருத்தோடும் ரமலான் பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாட வாழ்த்துக்கள்’’ என்று பேசினார்.

    மேலும் பார்க்க...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ilavarasan M
    First published: