Home /News /tamil-nadu /

MK Stalin Birthday: மு.க.ஸ்டாலின் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி, பினராயி விஜயன், உள்ளிட்டோர் வாழ்த்து

MK Stalin Birthday: மு.க.ஸ்டாலின் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி, பினராயி விஜயன், உள்ளிட்டோர் வாழ்த்து

பிரதமர் மோடி வாழ்த்து

பிரதமர் மோடி வாழ்த்து

MK Stalin Birthday: பிரதமர் நரேந்திர மோடி, மு.க.ஸ்டாலினை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு தமது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நீங்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். என்று தமது விருப்பதை தெரிவித்தார்.

மேலும் படிக்கவும் ...
    தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 69வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    பிரதமர் நரேந்திர மோடி, மு.க.ஸ்டாலினை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு தமது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நீங்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். என்று தமது விருப்பதை தெரிவித்தார். இதற்கு, தங்களின் ஒத்துழைப்புடன் நான் தொடர்ந்து தமிழகத்தின் வளர்ச்சிக்காக உழைப்பேன் என்று தெரிவித்துகொண்டார்.

    கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் தோழர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்தினேன். வரலாற்றுச் சிறப்புமிக்க கேரள-தமிழக உறவினை மேலும் வலுப்படுத்தவும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதியளித்திருக்கும் உயர்ந்த கொள்கைகளுக்காக அவர் தொடர்ந்து போராடவும் வாழ்த்துகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.


    இதையும் படிங்க: திராவிடத் தீரர்.. ஒடுக்கப்பட்டோரின் உரிமைக் குரல்: மு.க.ஸ்டாலின் பிறந்தநாளுக்கு கி.வீரமணி வாழ்த்து

    பாமக இளைஞர் அணித் தலைவரும் எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ், “தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலினின் 69-ஆவது பிறந்தநாளில் அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பொதுவாழ்க்கை சிறக்க வேண்டும்; அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார். 

    Published by:Murugesh M
    First published:

    Tags: DMK, MK Stalin, Narendra Modi

    அடுத்த செய்தி