குடிநீர் பிரச்னை குறித்து ஸ்டாலின் பேசுவதற்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை - தமிழிசை

குடிநீர் பிரச்னை குறித்து ஸ்டாலின் பேசுவதற்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை - தமிழிசை
தமிழிசை சவுந்தரராஜன்
  • Share this:
குடிநீர் பிரச்னை குறித்து பேசுவதற்கு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

டெல்லி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘‘பாஜக அகில பாரத செயல் தலைவராக, நட்டா பொறுப்பேற்கிறார். அவருக்கு வாழ்த்து சொல்வதற்காக தற்போது டெல்லி பயணிக்கிறேன். அவரின் அரசியல் அனுபவம், பாஜக கட்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

தண்ணீர் பிரச்னை தீர்க்கப்பட வேண்டிய ஒரு பிரச்னை. போர்க்கால அடிப்படையில் அரசாங்கம் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். இஸ்ரேல் நாட்டில், நடமாடும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் உள்ளது. அதேபோல் திட்டத்தை இங்கு நடைமுறைப்படுத்த வேண்டும்.


குடிநீர் பிரச்னை குறித்து ஸ்டாலின் பேசுவதற்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை’’ என்று தமிழிசை தெரிவித்தார்.

 

மேலும் படிக்க...

2- வது கணவருடன் சேர்ந்து மகனை கொடூரமாகக் கொன்று புதைத்த தாய்!

First published: June 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading