திமுகவின் தலைவராகிறாரா செயல் தலைவர் ஸ்டாலின்?

news18
Updated: August 10, 2018, 1:42 PM IST
திமுகவின் தலைவராகிறாரா செயல் தலைவர் ஸ்டாலின்?
திமுக தலைவர் கருணாநிதியுடன் ஸ்டாலின்
news18
Updated: August 10, 2018, 1:42 PM IST
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின் திமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் ஆகஸ்ட் 14ம் தேதி நடைபெறுகிறது.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த மாதம் 28ம் தேதி உடல் நலக் குறைவால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 10 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து கருணாநிதி கடந்த 7ம் தேதி மாலை உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து கருணாநிதியின் உடலை மெரினாவில் அண்ணாவின் நினைவிடத்தின் அருகில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இதில் சட்ட சிக்கல் ஏற்படும் என்று இதுகுறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்காக வந்தது. இன்று காலை இந்த வழக்கு விசாரனைக்கு வந்த போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்வதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.

அதனை தொடர்ந்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் முப்படைகளின் முழு அரசு மரியாதையுடன், 21 குண்டுகள் முழங்க திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின் திமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் ஆகஸ்ட் 14ம் தேதி நடைபெற உள்ளது. இ துகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அதில், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது.
First published: August 10, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...