சட்டசபை வரலாற்றை திமுக மாற்றி அமைத்து விழா கொண்டாடுகிறது - ஜெயக்குமார் குற்றச்சாட்டு

ஜெயக்குமார்

சட்டப்பேரவையில் நடக்கும் கருணாநிதி படத்திறப்பு விழாவை அதிமுக புறக்கணிப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  சட்டசபை வரலாற்றை திமுக மாற்றி அமைத்து விழா கொண்டாடுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். 

  தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சட்டசபை அரங்கில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவப்பட திறப்புவிழா இன்று மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்கிறார்.

  சட்டப்பேரவையில் நடக்கும் இந்த விழாவை அதிமுக புறக்கணிப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பேசிய  ஜெயக்குமார், “சட்டப்பேரவையில் நடக்கும் கருணாநிதி படத்திறப்பு விழாவை அதிமுக புறக்கணிக்கிறது. சட்டசபை வரலாற்றை திமுக மாற்றி அமைத்து விழா கொண்டாடுகிறது. சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் படத்திறப்பு விழாவை திமுக-வினர் புறக்கணித்தனர். அப்படி இருக்கும்போது கருணாநிதி படத்திறப்பு விழாவுக்கு நாங்கள் எப்படி வரமுடியும்” எனத் தெரிவித்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: