ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

DMK Cabinet : திமுக அமைச்சரவைக்கு வரவேற்பு அதிகம்..  ஆனாலும் ஒரு குறை.. தவிர்க்கப்பட்டதா நெற்களஞ்சியம்?

DMK Cabinet : திமுக அமைச்சரவைக்கு வரவேற்பு அதிகம்..  ஆனாலும் ஒரு குறை.. தவிர்க்கப்பட்டதா நெற்களஞ்சியம்?

திமுக

திமுக

திமுக அமைச்சரவையில் அனுபவம் இளமை என புதுக்கலவை. துறைகளின் பெயர் மாற்றம் உள்ளிட்டவை வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்திலிருந்து ஒருவர் அமைச்சராக இல்லாதது திமுகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தமிழ்நாடு முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பொறுப்பேற்கிறார். இதையடுத்து அவர் தலைமையிலான, தமிழ்நாடு அமைச்சரவையில் 34 அமைச்சர்கள், அவர்களின் துறைகள் விபரம் நேற்று வெளியிடப்பட்டது.

குறிப்பாக, மிக முக்கிய பிரச்சினையாக உள்ள நீர் வளத்தை நிர்வகிக்க பொதுப்பணித்துறையில் இருந்து நீர் வளத்துறை தனியாக ஏற்படுத்தப்பட்டு அனுபவம் பெற்ற துரைமுருகனுக்கு வழங்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை புதுமுகம் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வழங்கப்பட்டுள்ளது.

தேவையின் அடிப்படையில் பல்வேறு துறைகளின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அனுபவம், இளமை என புதுக்கலவையாக அமைச்சரவை அமைந்துள்ளது. இதை பலரும் வரவேற்றுள்ளனர்.

அதே நேரத்தில், தமிழ்நாட்டின்  நெற்களஞ்சியமான ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் இருந்து ஒருவர் கூட அமைச்சராக இல்லை.

குறிப்பாக, திமுகவில் மன்னை நாராயணசாமி, கோ.சி.மணி அதிமுகவில் எஸ்.டி.சோமசுந்தரம், அழகு திருநாவுக்கரசு என  முக்கியத்துவம் மற்றும் முக்கிய துறைகளும்  தொடர்ந்த நிலையில் தற்போது தவிர்க்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை என்று சொல்லப்படுகிறது.

இந்த மாவட்டங்களில் பெரும்பான்மை தொகுதிகளை திமுகவும் அதன் கூட்டணிகளுமே பெற்றுள்ளன. மொத்தம் 3 தொகுதிகள் உள்ள நாகை மாவட்டத்தில் ஒரு தொகுதியில் மட்டும்  திமுக போட்டியிட்டது. திமுகவின் வேதரத்தினம் வேதாரண்யத்தில் போட்டியிட்டு ஒ.எஸ்.மணியத்திடம் தோற்றார். நாகை, கீழ்வேளூரில் திமுகவின் கூட்டணிக் கட்சியினர் வெற்றி பெற்றுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் திமுக மற்றும் திமுக கூட்டணி முழுமையாகவும் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாட்டில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்,  திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் ஆகியோர் என 4 மாவட்டங்களில் 3 தொகுதிகளில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

இதையடுத்து  மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒருவர், திருவாரூர் மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர்  பூண்டி கலைவாணன், தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம்  அன்பழகன், திருவையாறு - துரை சந்திரசேகரன் உள்ளிட்டோர் அமைச்சராவார்கள் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட  மாவட்டங்களில் தலா 2 பேர் அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க... OPS vs EPS : எதிர்க்கட்சி தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட வேண்டும்... : அதிமுகவில் மீண்டும் சலசலப்பு

முக்கியத்துவம் பெற்ற ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில், திமுக தலைவர், முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி பிறந்த மாவட்டத்தில் ஒருவர் கூட அமைச்சராக இல்லாததது திமுகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: DMK, TN Cabinet, Trichy