கோவில்பட்டியில் அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ ராஜூ பேசினார். அப்போது அவர், ‘தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிறந்த முதல்வர் என்று பிரதமர் மோடி பாராட்டி உள்ளனர். சட்டமன்ற கூட்டத்தொடர் இறுதி நாளில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியது அவராக பேசவில்லை. ஜெயலலிதாவின் ஆன்மா பேசியது.
தி.மு.க கூட்டணியில் இல்லாமல் தேர்தலை சந்திக்க தயாரா? கடந்த தேர்தலின்போது முடிவு வருவதற்குமுன் அமைச்சரவை குறித்து ஒத்திகை பார்த்து நாடகம் நடத்தியவர்கள் திமுக. விவசாயி போல வேஷம் போடுபவர் மு.க.ஸ்டாலின். விவசாயம் பற்றி மு.க.ஸ்டாலினுக்கு என்ன தெரியும்? முகராசி பெற்ற மகாராசியாக இருந்தவர் ஜெயலலிதா. மழை ராசி பெற்றவராக இருப்பார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. சட்டமன்ற கடைசி கூட்டத்தொடரில் எதிர்கட்சிகள் ஜனநாயக கடமையை ஆற்றவில்லை. அ.தி.மு.க தொண்டர்களை நம்பி தேர்தலில் நிற்கிறது.
தி.மு.க தொண்டர்களை நம்பமால் பிரசாத் கிஷோர் ஐ பேக்கினை நம்புகிறது. அ.தி.மு.க வாழும், தி.மு.க வீழும். வரும் தேர்தலில் தி.மு.க தொண்டர்கள் தி.மு.கவை தோற்க்கடிப்பார்கள். ஐ பேக்கினால் தி.மு.கவிற்கு கோ பேக் தான். அ.தி.மு.க ஹாட்ரிக் வெற்றி பெற போகிறது. சஷ்டி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வெற்றி நிச்சயம். தி.மு.கவிற்கு எதிர்கட்சி அந்துஸ்துக்கூட கிடைக்காது’ என்று தெரிவித்தார்.