திமுக கூட்டணியில், விடுதலை சிறுத்தை கட்சிக்கு அறிவித்த
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் திமுக வேட்பாளர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். 30 வார்டுகள் கொண்ட நெல்லிக்குப்பம் நகராட்சியில் திமுக சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், விடுதலை சிறுத்தைகள் வேட்பாளரை எதிர்த்து திமுக மனு தாக்கல் செய்தது. இதனை அடுத்து நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளர் ஜெயந்தி 23 வாக்குகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் 3 வாக்குகளும் பெற்றனர். 3 செல்லாத வாக்குகள் பதிவானது. இந்நிலையில், கூட்டணி கட்சியான விடுதலைச் சிறுத்தைகளை திமுக வேட்பாளர் நெல்லிக்குப்பத்தில் தோற்கடித்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

ஜெயந்தி
இதேபோல, தருமபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தலைவர் பதவி அறிவிக்கப்பட்டது. அதன்படி, விசிக சின்னவேடி என்பவருக்கு அந்த பதவியை ஒதுக்கி அறிவித்திருந்தது. இந்நிலையில். இன்று நடந்த மறைமுக தேர்தலில் திமுகவை சேர்ந்த சாந்தி என்பவர் வேட்புமனு தாக்கல் செய்து 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
Must Read : தேனியில் காங்கிரஸுக்கு அதிர்ச்சி அளித்த திமுக கவுன்சிலர்கள்.. காங்கிரஸ் நகராட்சித் தலைவர் வேட்பாளர் வெளிநடப்பு..
இதனால், விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்கள் பாப்பிரெட்டிபட்டி சாலையில் அமர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். கூட்டணி தர்மத்தை திமுக மதிக்கவில்லை என்றும் கூறியும் அதனைக் கண்டித்தும் 500க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். இதனால், அங்கே அசம்பாவிதம் நடைபெறாமல் தடுப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.