எங்கள் தொகுதியில் பிரசாரம் செய்யுங்கள் மோடி... ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யும் திமுக வேட்பாளர்கள்!

எங்கள் தொகுதியில் பிரசாரம் செய்யுங்கள் மோடி... ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யும் திமுக வேட்பாளர்கள்!

பிரதமர் மோடி

கோவை தொண்டாமூத்தூர் தொகுதி வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி எஸ்.பி. வேலுமணிக்கு ஆதரவாக வந்து பரப்புரை செய்யுமாறு அழைப்பு விடுத்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்துள்ள நிலையில் அவரை தங்களின் தொகுதிக்கு வந்து அதிமுக மற்றும் அவர்களின் கூட்டணி கட்சியினருக்கு ஆதரவாக பரப்புரை செய்யுமாறு திமுக வேட்பாளர்கள் ட்விட்டரில் அழைப்பு விடுத்து வருகின்றனர்.

ஏற்கனவே கோவை தொண்டாமூத்தூர் தொகுதி வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி எஸ்.பி. வேலுமணிக்கு ஆதரவாக வந்து பரப்புரை செய்யுமாறு அழைப்பு விடுத்தார்.

இந்த நிலையில் தாம்பரம் தொகுதியில் போட்டியிடும் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் தொகுதியில் போட்டியிடும் இ.கருணாநிதி, கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடும் செங்குட்டுவன், பர்கூர் தொகுதியின் மதியழகன், முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிடும் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், திருச்சியில் போட்டியிடும் இனிக்கோ இருதயராஜ், ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் ஆர்.காந்தி மேலும் பல்வேறு திமுக சட்டமன்ற வேட்பாளர்கள் பிரதமர் நரேந்திர மோடியை டேக் செய்து தங்களின் தொகுதிக்கு வந்து பிரசாரம் செய்தால் தங்களின் வெற்றிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அழைப்பு விடுக்கின்றனர்.

Also read... எம்.எல்.ஏ., மகன் காரில் ரூ.1 கோடி பறிமுதல் விவகாரத்தில் அடுத்தடுத்து பகீர் திருப்பங்கள்...!தமிழகம் முழுவதும் பாஜகவின் கூட்டணிக்கட்சிகளே பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் கொடிகளை பிரச்சாரத்தின் போது பயன்பாடுத்தாமல் இருக்கும் நிலையில் திமுக வேட்பாளர்கள் பிரதமரை அழைப்பு விடுத்து அவர்களை இக்கட்டில் சிக்க வைத்து வருகின்றனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: