உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கத்தில் போட்டி - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கத்தில் போட்டி - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

உதயநிதி ஸ்டாலின்

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுகிறார்.

  • Share this:
திமுக கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு நேற்றுடன் நிறைவடைந்திருக்கும் நிலையில் இன்று திமுக போட்டியிடும் 173 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் தொகுதியில் நடிகரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் போட்டியிட உள்ளார்.

சேப்பாக்கம் தொகுதியில் தான் போட்டியிட உதயநிதி ஸ்டாலின் விருப்பமனு அளித்த போதே அவருக்கு அத்தொகுதி ஒதுக்கப்படும் என அரசியல் நோக்கர்கள் கருதினர். முன்னதாக அத்தொகுதியில் யார் போட்டியிட்டாலும் அவரை வெற்றி பெறச் செய்வதே என் இலக்கு என்றும் தனக்கு வாய்ப்பளித்தால் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில் முதல் முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

திமுக வேட்பாளர் பட்டியலி குறிப்பிடத்தக்க வேட்பாளர்களாக வேலூர் மாவட்டம் காட்பாடியில் 10-வது முறையாக துரைமுருகன் போட்டியிடுகிறார். அவர் 10 முறை காட்பாடி தொகுதியிலும் 2 முறை ராணிப்பேட்டை தொகுதியிலும் போட்டியிட்டுள்ளார். அதேபோல் மு.க.ஸ்டாலின், கே.என்.நேரு திருச்சி மேற்கு தொகுதியிலும், மா.சுப்ரமணியன் சைதாப்பேட்டையிலும் போட்டியிடுகின்றனர்.

வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டதை அடுத்து திமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
Published by:Sheik Hanifah
First published: