மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

மெரினா கடற்கரையில் கருணாநிதியை அடக்கம் செய்ய அரசு இடம் தர மறுத்த நிலையில், நீதிமன்றத்தை நாடி வெற்றி தேடித்தந்ததில் வில்சனின் பங்கு அதிகம்.

news18
Updated: July 1, 2019, 12:14 PM IST
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!
துரைமுருகன், ஸ்டாலின், வில்சன் மற்றும் சண்முகம்
news18
Updated: July 1, 2019, 12:14 PM IST
தமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எம்.எல்.ஏ.க்கள் பலத்தின் அடிப்படையில் திமுகவுக்கு 3 இடங்கள் கிடைக்கும்.

தமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

கடந்த 2013-ம் ஆண்டு தமிழகத்தில் இருந்து 6 பேர் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் மைத்ரேயன், அர்ஜூனன், ஆர்.லட்சுமணன் மற்றும் ரத்னவேல் ஆகியோர் அதிமுக சார்பிலும், கனமொழி திமுக சார்பிலும், டி.ராஜா இந்திய கம்யூனிஸ்ட் சார்பிலும் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களில் கனிமொழி மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதால் தனது மாநிலங்களவை எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். மற்ற 5 பேர்களின் பதவிக்காலம் வரும் 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதற்கான தேர்தல் வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளது.

கனிமொழி


எம்.எல்.ஏ.க்கள் பலத்தின் அடிப்படையில் அதிமுக மற்றும் திமுகவுக்கு தலா 3 இடங்கள் கிடைக்கும். இரு கட்சிகளும் தலா 3 வேட்பாளர்களை மட்டும் நிறுத்தினால், தேர்தல் தேவையில்லை. அவர்கள் போட்டியின்று தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

பாமகவுக்கு ஒரு சீட் ஒதுக்கப்படும் என்று மக்களவை தேர்தல் சமயத்தில் அதிமுக உடன்பாடு செய்துகொண்டது. அதன்படி, அக்கட்சிக்கு ஒரு சீட் கொடுக்கப்படும். பாமகவின் இளைஞரணித் தலைவரான அன்புமணி ராமதாஸ் போட்டியிட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதிமுகவிற்கு இருக்கும் மற்ற இரு சீட்டுகளில், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் ஒருவருக்கும் ஓ. பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் ஒருவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

CM EdappaDi Paniswami and DyCM O Panner Selvam
முதல்வர் மற்றும் துணை முதல்வர் (கோப்புப் படம்)


தனக்கு சீட் வழங்க வேண்டும் என்று கூறி பல அதிமுக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசி வருகின்றனர். திமுகவுக்கு கிடைக்கும் 3 சீட்டுகளில், தேர்தல் ஒப்பந்தப்படி மதிமுகவுக்கு ஒரு சீட் ஒதுக்கப்படும்.

மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தேர்வாக வாய்ப்புகள் அதிகம். மற்ற இரு சீட்டுகளில் திமுக முக்கிய இரண்டு பேரை நிறுத்த உள்ளது. திமுகவின் வழக்கறிஞர் அணியில் இருக்கும் வில்சன் மற்றும் திமுகவின் தொழிற்சங்க அமைப்பான தொமுச தலைவர் சண்முகம் ஆகியோருக்கு சீட் வழங்கப்படலாம் என்று கூறப்பட்டது.

இதனை உறுதி செய்யும் வகையில் இருவருமே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.வில்சன் திமுகவுக்காக பல முக்கிய வழக்குகளில் வாதாடி வெற்றி தேடித்தந்துள்ளார். குறிப்பாக மெரினா கடற்கரையில் கருணாநிதியை அடக்கம் செய்ய அரசு இடம் தர மறுத்த நிலையில், நீதிமன்றத்தை நாடி வெற்றி தேடித்தந்ததில் வில்சனின் பங்கு அதிகம்.

வில்சன்


சண்முகம் தொமுச சார்பில், பல போராட்டங்களை முன்னின்று நடத்தியுள்ளார். வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஸ்டாலினை சந்தித்து வில்சன் மற்றும் சண்முகம் வாழ்த்து பெற்றனர்.

First published: July 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...