#BREAKING | 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

20-க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக வெல்லும் பட்சத்தில் அது அதிமுக ஆட்சிக்கு ஆபத்தாக முடியும் வாய்ப்பு உள்ளது.

news18
Updated: April 13, 2019, 12:47 PM IST
#BREAKING | 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
20-க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக வெல்லும் பட்சத்தில் அது அதிமுக ஆட்சிக்கு ஆபத்தாக முடியும் வாய்ப்பு உள்ளது.
news18
Updated: April 13, 2019, 12:47 PM IST
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் மற்றும் சூளூர் ஆகிய 4 தொகுதிகளுக்கு நடக்க இருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருந்தன. வழக்கு காரணமாக திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய மூன்று தொகுதிகள் தவிர்த்து 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், மக்களவை தேர்தல் நடக்கும் ஏப்ரல் 18 அன்று நடக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், 21 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின.திமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
மேலும், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன.

இதற்கிடையே, சூளூர் எம்.எல்.ஏ கனகராஜ் காலமானார். இதனால், அந்த தொகுதியும் காலியானது. இந்நிலையில், காலியாக இருக்கும் 22 சட்டமன்ற தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மீதமுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் மே 19-ம் தேதி நடக்கும் என்று தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.

மே 23-ம் தேதி மக்களவை தேர்தல் முடிவுகளுடன் மேற்கண்ட 22 சட்டமன்ற தொகுதிகளுக்குமான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

ஆட்சியைத்தக்கவைத்துக்கொள்ள அதிமுக குறைந்தபட்சம் 6 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஒருவேளை 20-க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக வெல்லும் பட்சத்தில் அது அதிமுக ஆட்சிக்கு ஆபத்தாக முடியும் வாய்ப்பு உள்ளது.
Loading...
இந்நிலையில், 4 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் இன்று அறிவித்தார்.



சூளூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில் பாலாஜி, திருப்பரங்குன்றம் தொகுதியில் டாக்டர் சரவணன் மற்றும் ஓட்டப்பிடாரம் தொகுதியில் எம்.சி சண்முகையா வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.






தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...