நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் சென்னை மாநகராட்சிக்கான வேட்பாளர்களின் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது. அதன்படி, திமுக 153 வார்டுகளில் போட்டியிடுகிறது. 99வது வார்டில் பரிதி இளம்வழுதியின் மகள் பரிதி இளம் சுருதி போட்டியிடுகிறார். 188-வது வார்டில் மடிப்பாக்கம் செல்வத்தின் மனைவி சமீனாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 141வது வார்டில் மறைந்த அன்பழகனின் மகன் ராஜா அன்பழகனுக்கு திநகரில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. இதேபோல, திருவொற்றியூர் திமுக பகுதி செயலாளர் தனியரசுக்கு போட்டியிட, 10ஆவது வார்டில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை வார்டுகள் வழங்கப்படும் என்பது குறித்து காங்கிரஸ் மற்றும் திமுக தலைவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இதனைதொடர்ந்து இரு கட்சிகள் இடையே உடன்பாடு ஏற்பட்ட நிலையில், சென்னை மாநகராட்சியில் உள்ள மொத்தம் 200 வார்டுகளில் காங்கிரசுக்கு 16 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, வடசென்னை கிழக்கு மாவட்டத்தில் வார்டு எண்கள் 6, 22, 50ல் சாமுவேல் திரவியம், தீர்த்தி மற்றும் சுரேஷ் குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். வார்டு எண் 37ல் டில்லிபாபு, 63ல் சிவராஜசேகரன், 109ல் சுகன்யா, 96ல் எஸ்.தனலட்சுமி களமிறங்கவுள்ளனர். இதேபோன்று வார்டு எண் 77ல் சுமதி, 170ல் முத்தழகன், 134ல் சுசீலா கோபாலகிருஷ்ணன்,173ல் சுபாஷினி மற்றும் 126ல் அமிர்த வர்ஷினி ஆகியோர் போட்டியிடுகின்றனர். 165வது வார்டில் நாஞ்சில் ஈஸ்வரபிரசாத், 79ல் பானுபிரியா, 92ல் ஜி.முரளி, மற்றும் 31ல் சங்கீதா ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தனது முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், சென்னை மாநகராட்சியில் அளிக்கப்பட்ட இடப்பங்கீட்டின் அடிப்படையில், 193-வது வார்டில் ஏழுமலையும், 42-வது வார்டில் ரேணுகா-வும், 84-வது வார்டில் விஜயகுமாரும் போட்டியிடுகின்றனர் மேலும், திருப்பூர், மதுரை, சேலம், தஞ்சை, தூத்துக்குடி உட்பட 9 மாநகராட்சிகளில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிடுவோரின் பட்டியலும் வெளியிடப்பட்டது.
Must Read : டாஸ்மாக் பார்களை 6 மாதத்திற்குள் மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
அத்துடன், ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட 17 நகராட்சிகள் மற்றும் ஊத்துக்குளி, ஆண்டிபட்டி, கீழ்வேளூர் உள்ளிட்ட 26 பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ளது என்பது குறிப்புடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.