டிரம்செட், பேண்ட் வாசித்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட தங்கத் தமிழ்ச் செல்வன்

டிரம்செட், பேண்ட் வாசித்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட தங்கத் தமிழ்ச் செல்வன்

தங்கத் தமிழ்ச் செல்வன்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன்  ட்ரம் செட், பேண்டு வாத்தியங்கள் இசைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

  • Share this:
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் தங்கத் தமிழ்செல்வன் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். போடிநாயக்கனூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் அவர், துணி தேய்ப்பது, காய்கறி வியாபாரம் செய்வது, இட்லி, பூரி உள்ளிட்ட உணவுகள் தயார் செய்வது வித்தியாசமான முறையில் மக்களை சந்தித்து வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக இன்று காலை போடிநாயக்கனூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தங்கத் தமிழ்செல்வன், கீழத்தெரு, கட்டபொம்மன் சிலை மற்றும் சர்ச் தெரு உள்ளிட்ட பகுதிகளை சந்தித்தார். இதில் சர்ச் தெரு பகுதியில் ட்ரம் செட், பேண்டு வாத்திய கலைஞர்கள் அதிகம் வாழ்ந்து வருவதை அறிந்த தங்க தமிழ்செல்வன், அவர்களுடன் இணைந்து வாத்தியங்களை இசைத்தவாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பேண்டு வாத்தியத்தை இசைத்தவாறு வீதிகள் தோறும் மக்களை சந்தித்த தங்கதமிழ்செல்வனுக்கு போடி பகுதி மக்கள் கை தட்டியும், நடனமாடியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: