தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
திமுக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் இழுபறி நீடித்ததால், திட்டமிட்டபடி வேட்பாளர் பட்டியல் வெளியிட முடியாத சூழல் உருவானது.
காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கான தொகுதிகள் நேற்றிரவு இறுதி செய்யப்பட்டதால், திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளது. அதைத்தொடர்ந்து திமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியானது. திமுக-வை பொருத்தவரை 173 தொகுதிகளிலும், உதய சூரியன் சின்னத்தில் 187 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
இந்நிலையில், திமுக-வின் தேர்தல் அறிக்கை, நாளை வெளியாக உள்ளது. ஏற்கனவே அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார்.
அப்போது, குடும்பத் தலைவிகளுக்கு தலா 1000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வேட்பாளர் பட்டியல்:
கொளத்தூர் - மு.க.ஸ்டாலின்
பத்மநாபபுரம் - மனோ தங்கராஜ்
கன்னியாகுமரி - ஆஸ்டின்
நாகர்கோவில் - சுரேஷ்ராஜன்
ராதாபுரம் - அப்பாவு
ஆலங்குளம் - பூங்கோதை
திருச்செந்தூர் - அனிதா ராதாகிருஷ்ணன்
தூத்துக்குடி - கீதாஜீவன்
விளாத்திகுளம் -மார்க்கண்டேயன்
முதுகுளத்தூர் - ராஜகண்ணப்பன்
திருச்சுழி -தங்கம் தென்னரசு
விருதுநகர் - ஏ.ஆர்.ஆர் சீனிவாசன்
திருமங்கலம் - மணிமாறன்
மதுரை கிழக்கு - பி.மூர்த்தி
பட்டுக்கோட்டை - அண்ணாதுரை
தஞ்சாவூர் - நீலமேகம்
கும்பகோணம் - அன்பழகன்
நன்னிலம் - ஜோதிராமன்
மன்னார்குடி - டி.ஆர்.பி.ராஜா
வேதாரண்யம் - எஸ்.கே.வேதரத்தினம்
திருவாரூர் - பூண்டி கலைவாணன்
நெய்வேலி -சபா ராஜேந்திரன்
குன்னம் - எஸ்.எஸ்.சிவசங்கர்
துறையூர் - ஸ்டாலின்குமார்
மணச்சநல்லூர் - கதிரவன்
திருவெறும்பூர் - அன்பில் மகேஷ்
திருச்சி கிழக்கு -இனிகோ இருதயராஜ்
நத்தம் - ஆண்டி அம்பலம்
ஆத்தூர் - ஐ பெரியசாமி
ஒட்டன்சத்திரம்- அர.சக்கரபாணி
பழனி- செந்தில்குமார்
தொண்டாமுத்தூர் - கார்த்திகேய சேனாதிபதி
கவுண்டபாளையம் - பையா கவுண்டர்
கோபி - மணிமாறன்
காங்கேயம் - மு.பெ.சாமிநாதன்
மொடக்குறிச்சி- சுப்புலட்சுமி ஜெகதீசன்
நாமக்கல் - ராமலிங்கம்
இராசிபுரம் - மதிவேந்தன்
சேலம் வடக்கு - ஆர்.ராஜேந்திரன்
எடப்பாடி - சம்பத்குமார்
ஆத்தூர் - ஜீவா ஸ்டாலின்
கெங்கவல்லி - ரேகா பிரியதர்சினி
இரிஷிவந்தியம் -வசந்தம் கார்த்திகேயன்
விழுப்புரம்- டாக்டர் லட்சுமணன்
செஞ்சி - மஸ்தான்
மயிலம் - மாசிலாமணி
திருக்கோவிலூர்- பொன்முடி
விக்கிரவாண்டி - புகழேந்தி
திருவண்ணாமலை- எ.வ.வேலு
ஒசூர் - பிரகாஷ்
கிருஷ்ணகிரி -செங்குட்டுவன்
ஜோலார்பேட்டை - தேவராஜ்
அணைக்கட்டு - நந்தகுமார்
வேலூர் - கார்த்திகேயன்
உத்திரமேரூர் - க.சுந்தர்
தாம்பரம் - எஸ்.ஆர்.ராஜா
ஆலந்தூர் - தாமோ அன்பரசன்
ஆவடி -நாசர்
கும்மிடிப்பூண்டி - டி.ஜே.கோவிந்தராஜன்
அம்பத்தூர் - ஜோசப்
மதுரவாயில் - காரப்பாக்கம் கணபதி
தி.நகர் - ஜெ.கருணாநிதி
சைதாப்பேட்டை - மா.சுப்ரமணியன்
விருகம்பாக்கம் - பிராபாகர் ராஜா
சேப்பாக்கம் - உதயநிதி ஸ்டாலின்
வில்லிவாக்கம் - வெற்றியழகன்
ஆர்.கே.நகர் - ஜே.ஜே.எபிநேசர்
ஆயிரம்விளக்கு - டாக்டர் எழிலன்
வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதற்கு முன்னதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘திமுக கூட்டணி அரசியல் கூட்டணி அல்ல. தேர்தல் கால கூட்டணியும் அல்ல. இது கொள்கை சார்ந்த கூட்டணி.’ என்றார். திமுக வேட்பாளர்கள் 173 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர் என்று கூறிய அவர் பின்னர், கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொதிகளின் எண்ணிக்கையை அறிவித்தார்.