ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மாநிலங்களவை தேர்தல்: திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு

மாநிலங்களவை தேர்தல்: திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு

அண்ணா அறிவாலயம்

அண்ணா அறிவாலயம்

திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுபவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ராஜ்யசபா எம்பி பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  மாநிலங்களவை தேர்தல் ஜூன் 3ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இதற்கான திமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி தலைமை வெளியீட்டுள்ளது. அதில், காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாகும் 57  மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.  தமிழகத்தில் திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, அதிமுகவின் நவநீதகிருஷ்ணன் மற்றும் ராஜேஷ்குமார், எஸ்.ஆர் பாலசுப்ரமணியன், ஏ.விஜயகுமார் உள்ளிட்டோரின் பதவிக்காலம் ஜூன் 29ம் தேதியுடன் முடிவடைகிறது.

  தற்போதைய நிலையில் ஒரு எம்பி வெற்றி பெற 34 எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள் தேவைப்படும். எனவே, 159 எம்.எல்.ஏ.க்களை கொண்டுள்ள திமுக 4 எம்பிக்களை பெற முடியும். இதேபோல், 75 எம்.எல்.ஏ.க்களை கொண்டுள்ள அதிமுக கூட்டணிக்கு 2 எம்பிக்கள் கிடைக்கக் கூடும்.

  ராஜ்யசபா எம்பி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இம்மாதம் 24ம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில், மாநிலங்களை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக தலைமை வெளியிட்டுள்ளது. அதன்படி, திமுக சார்பில் தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் கல்யாணசுந்தரம், நாமக்கல் திமுக மாவட்டச் செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், வழக்கறிஞர் கிரிராஜன் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதையும் படிங்க: அதிமுக எங்கள் பங்காளி... பாஜக பகையாளி: திமுகவின் ஆர்.எஸ்.பாரதி பேச்சு 

  மேலும், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய தேசிய காங்கிரஸ் காட்சிக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Congress, DMK, Rajya sabha MP