வேலூரில் தேர்தல் நடத்தக் கோரி தலைமை தேர்தல் ஆணையருக்கு திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் கடிதம்!

வேலூர் மாவட்டம் காட்பாடியிலுள்ள தி.மு.க பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அவரது கல்லூரிகளில் கடந்த மாதம் 29-ம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டர். அப்போது, துரை முருகன் வீட்டிலிருந்து 10 லட்ச ரூபாய் கைப்பற்றினர்

Web Desk | news18
Updated: April 17, 2019, 7:19 AM IST
வேலூரில் தேர்தல் நடத்தக் கோரி தலைமை தேர்தல் ஆணையருக்கு திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் கடிதம்!
தேர்தல் ஆணையம்
Web Desk | news18
Updated: April 17, 2019, 7:19 AM IST
வேலூர் மக்களவை தேர்தல் ரத்து அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையருக்கு திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் கடிதம் அனுப்பியுள்ளார்.





ஏற்கனவே , வேலூர் மாவட்டம் காட்பாடியிலுள்ள தி.மு.க பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அவரது கல்லூரிகளில் கடந்த மாதம் 29-ம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டர். அப்போது, துரை முருகன் வீட்டிலிருந்து 10 லட்ச ரூபாய் கைப்பற்றினர்.

பின்னர், இரு தினங்கள் கழித்து ஏப்ரல் 1-ம் தேதி நடைபெற்ற சோதனையில், துரைமுருகனுக்கு நெருக்கமான தி.மு.க பிரமுகர் சீனிவாசன் வீடு மற்றும் அவரின் சிமென்ட் குடோனுக்குள் மூட்டையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் பணம் கட்டுக்கட்டாக சிக்கின. 10 கோடி ரூபாய் வரை பணம் சிக்கியதாக கூறப்பட்டது.

வேலூர் மாவட்ட மக்களவைத் தொகுதி தேர்தலை ரத்து செய்வதற்கு தமிழக தேர்தல் ஆணையம் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்ததால் அம்மாவட்டத்துக்கு மட்டும் தேர்தலை ஒத்திவைப்பதற்கான பரிந்துரையை குடியரசுத் தலைவருக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் அனுப்பியது.

தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைக்கு தற்போது, குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்அடிப்படையில், வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது  தேர்தல் ரத்து அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையருக்கு திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் கடிதம் அனுப்பியுள்ளார்.




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





Also watch: பிரசாரத்தின் போது சாலையோரக் கடையில் தேநீர் அருந்திய முதல்வர்!

First published: April 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...