Home /News /tamil-nadu /

திருநின்றவூரில் திமுக சார்பில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வெற்றி

திருநின்றவூரில் திமுக சார்பில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வெற்றி

வெற்றி பெற்ற வேட்பாளர்கள்

வெற்றி பெற்ற வேட்பாளர்கள்

திருநின்றவூர் நகராட்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன் தம்பி உட்பட 3 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

திருநின்றவூர் தேர்வுநிலை பேரூராட்சியாக இருந்தது. தற்போது 6 மாதங்களுக்கு முன்பு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க கூட்டணி சார்பில்  27 இடங்களிலும் அ.தி.மு.க  சார்பில் 26 இடங்களிலும் போட்டியிட்டது. இதில் சுயேட்சையாக 35 பேர் போட்டியிட்டனர். இதில் திருநின்றவூர் நகராட்சியில் 15 தி.மு.க வேட்பாளர் வெற்றி பெற்றதில் நகராட்சியை தன் வசம் வைத்துக் கொண்டது.

குறிப்பாக தி.மு.க வேட்பாளராக 14 வார்டில் முன்னாள் பேரூராட்சி தலைவரூம் நகரச் செயலாளருமான தி.வை.ரவி 924 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து 1வது வார்டில் போட்டியிட்ட  இவரது மனைவி உஷாராணி ரவி 506 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

“அரசின் நிர்வாகத்தை நீதிமன்றம் நடத்த முடியாது“ சமச்சீர் கல்விக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

இதேபோல ரவியின் தம்பி சுரேஷ்குமார் 25வது வார்டில் போட்டியிட்டு 949 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். திருநின்றவூர் நகராட்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன், தம்பி, அண்ணனின் மனைவி என 3 பேரும் வார்டு உறுப்பினராக தேர்வாகியுள்ளது திமுக கட்சியினரிடையே மகிழ்ச்சியையும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Published by:Karthick S
First published:

Tags: Local Body Election 2022

அடுத்த செய்தி