இந்தித் திணிப்பைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் செப்.20-ல் ஆர்ப்பாட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ஒரே மொழியாக இந்தி இருந்தால் உலக அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த முடியும். இந்தி மொழியை மக்கள் அடிக்கடி பயன்படுத்த வேண்டும்.

இந்தித் திணிப்பைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் செப்.20-ல் ஆர்ப்பாட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மு.க.ஸ்டாலின்
  • News18
  • Last Updated: September 16, 2019, 9:11 PM IST
  • Share this:
மத்திய அரசின் இந்தித் திணிப்பு நடவடிக்கையைக் கண்டித்து செப்டம்பர் 20-ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தி தினத்தையொட்டி உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தி குறித்து கருத்து பதிவிட்டுள்ளார். அதில், ‘ இந்தியாவில் பல மொழிகள் இருக்கிறது. ஒவ்வொரு மொழிக்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு. ஆனால் இந்தியாவை அடையாளப்படுத்த ஒரு பொது மொழி தேவை. அதிகம் பேரால் பேசப்படுவதால் இந்தி நாட்டின் பொது மொழியாக இருக்க வேண்டும். ஒரே மொழியாக இந்தி இருந்தால் உலக அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த முடியும். இந்தி மொழியை மக்கள் அடிக்கடி பயன்படுத்த வேண்டும்’ என்று பதிவிட்டிருந்தார்.

அவருடைய பதிவு மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருடைய பதிவுக்கு நாடு முழுவதும் மிகப் பெரிய கண்டனங்கள் எழுந்தன.


இந்தநிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை தேனாம்பேட்டையிலுள்ள அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், ‘மத்திய அரசின் இந்தித் திணிப்பு நடவடிக்கையைக் கண்டித்து செப்டம்பர் 20-ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும். மத்திய அரசின் தொடர் நடவடிக்கைகளைப் பொறுத்து தோழமை கட்சிகளுடன் இந்தப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வது குறித்து முடிவு செய்யப்படும்’ என்று தெரிவித்தார்.

Also see:
First published: September 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்