ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ட்விட்டர் டிரெண்டிங்.. ஆளுநருக்கு எதிராக சென்னையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்...!

ட்விட்டர் டிரெண்டிங்.. ஆளுநருக்கு எதிராக சென்னையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்...!

ஆளுநருக்கு எதிராக போஸ்டர்

ஆளுநருக்கு எதிராக போஸ்டர்

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சென்னை மாவட்ட திமுக நிர்வாகிகள் நகரின் முக்கிய பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

இந்த ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டம் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. அரசின் கொள்கை விளக்கங்களை தனது உரையில் எடுத்துவைத்த ஆளுநர், திராவிட மாடல், அண்ணா, பெரியார் உள்ளிட்ட வார்த்தைகளையும், மாநில மொழிகள் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்பதையும் தவிர்த்துவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்த நிலையில், பாதியிலேயே அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார் ஆளுநர். இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியல் களத்தில் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஆளுநர் செய்தது அவை மரபு மீறிய செயல் என்று பல அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. விசிக, மார்க்சிஸ்ட் ஆகியவை ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளன.

இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து சென்னையின் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னை அண்ணா சாலை, ஜெமினி மேம்பாலம் மற்றும் அண்ணா அறிவாலயம்  பகுதியிலுள்ள சாலைகளில் போஸ்டர்கள் அதிகளவில் ஒட்டப்பட்டுள்ளன. அதில் Twitter No.1 trending #GetOutRavi என வாசகம் இடம்பெற்றுள்ளது. மேலும் பதிவிட்ட அனைவருக்கும் நன்றி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

போஸ்டரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, தயாநிதி மாறன் ஆகியோர் புகைப்படங்களோடு, சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் சிற்றரசு மற்றும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஹேமந்த் அண்ணாதுரை உள்ளிட்டோர் பெயர் மற்றும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. ஆளுநரை கண்டித்து சென்னையில் திமுக நிர்வாகி போஸ்டர் ஒட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: DMK, RN Ravi, TN Assembly