வெற்றிலை பாக்கு தட்டுடன் வீடு வீடாக சென்று கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திமுகவினர்!

கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய திமுகவினர்

கோவை மாவட்டத்தில் திமுகவினர் கடந்த சில தினங்களாக கொரொனா விழுப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • Share this:
கோவையில் கொரொனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  திமுகவினர் வீடு வீடாக கையில்  வெற்றிலை பாக்கு தட்டுடன் சென்று முககவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கினர்.

கொரானா பெருந்தொற்றின் இரண்டாவது அலை  நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் நாள்தோறும் கொரொனா தொற்று பரவல் வேகமாக இருக்கும் நிலையில் திமுகவினர் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் திமுகவினர் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் திமுகவினர் கடந்த சில தினங்களாக கொரொனா விழுப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை புறநகர் பகுதியான  பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட குருடம்பாளையம், கோத்தாரி நகர் ஆகிய பகுதிகளில் திமுகவினர் இன்று வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது கையில் வெற்றிலை, பாக்கு, தட்டினை தூக்கி கொண்டு வீடு வீடாக சென்ற திமுகவினர், கட்டாயம்  முககவசம் அணிய வேண்டும் என்பதை  பொது மக்களுக்கு வலியுறுத்தியதுடன் துணியால் செய்யப்பட்ட இரண்டு முக கவசங்களையும் இலவசமாக வழங்கினர்.

ராமேஸ்வரத்திற்கு வரும் வெளிமாநில வாகனங்களுக்கு இ பாஸ் கட்டாயம்! 

மேலும் கபசுர குடிநீரையும் வீடு வீடாக பொது மக்களுக்கு வழங்கிய திமுகவினர் கொரொனா தொற்று வேகமாக பரவி வருவதால் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதையும் அறிவுறுத்தினர்.கோத்தாரி நகர், குருடம்பாளையம் பகுதிகளில் இன்று முக கவசம், கபசுர குடிநீர் வழங்கிய திமுகவினர் தினமும் ஓவ்வொரு பகுதியாக சென்று பெருந்தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
Published by:Arun
First published: