பஜ்ஜி சாப்பிட்டதற்கு பணம் கேட்ட கடை ஊழியரை, திமுகவினர் தாக்கியதாக வெளியான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட வைத்தியநாதன் மேம்பாலம் அருகில் தங்கபாண்டியன் என்பவர் உணவகம் நடத்தி வருகிறார். இங்கு, நேற்று மாலை திமுகவைச் சேர்ந்த கரிமேடு ராஜி, சிலம்பரசன், யுவராஜ் மற்றும் முருகன் அகியோர் வடை, பஜ்ஜி சாப்பிட்டுள்ளனர்.
பின்னர், இவர்களிடம் கடையில் வேலை செய்த ஊழியர், சாப்பிட்டதற்கு பணம் கேட்டுள்ளார். ஆனால், தாங்கள் யார் என்று தெரியுமா என்று அவர்கள் அவதூறாக பேசி வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், உன்னை என்ன செய்கிறோம் பார் என்று மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர். இதையடுத்து, இரவு 10 மணி அளவில் திமுக முன்னாள் வட்டச் செயலாளரும், வழக்கறிஞருமான ரஜினி என்பவர் தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர் உணவகத்திற்குள் வந்துள்ளனர்.
அப்போது, உள்ளே புகுந்து உரிமையாளர் தங்கபாண்டியனை தரக்குறைவாக பேசியதுடன், ஊழியர் முருகனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்து அவர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அண்மையில், விருகம்பாக்கத்தில் பிரியாணி கடை ஒன்றில் திமுகவினர் தாக்குதல் நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
See Also:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.