மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டி பிரார்த்தனை : கை விரலை துண்டித்த திமுக தொண்டர்

திமுக தொண்டர் | தலைவர்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டி தொண்டர் ஒருவர் கோவிலில் விரலை துண்டித்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 • Share this:
  தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆளும் கட்சியாக செயல்பட்டு வருகிறது. இந்த முறை கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு பெரும் அரசியல் ஆளுமைகள் இல்லாமல் நடக்கும் முதல் சட்டப்பேரவைத் தேர்தலாக இத்தேர்தல் அமைந்துள்ளது. தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வியும், விவாதமும் தொடங்கிவிட்ட நிலையில் பெரும்பாலான கருத்து கணிப்பு முடிவுகள் திமுக ஆட்சியை பிடிக்கும் என்றே கூறுகின்றன.

  இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டி மாரியம்மன் கோவிலில் பிரார்த்தனை செய்த தீவிர திமுக தொண்டர் ஒருவர் தனது இடது கை சுண்டு விரலை துண்டித்துள்ளார்.

  விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்தவர் குருவையா(66)கூலி வேலை செய்து வருகிறார்.இவர் தீவிர திமுக விசுவாசியாக இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2011 மற்றும் 2016 தேர்தல்களில் திமுக தோல்வி அடைந்து ஆட்சி அமைக்கவில்லை என்ற விரக்தியில் இருந்து வந்துள்ளார். இதனால் இவர் ஆண்டுதோறும் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு கிடாய் வெட்டி பொங்கல் வைத்து வேண்டி வந்துள்ளார்.

  இந்த ஆண்டு  சட்டப் பேரவை பொது தேர்தல் நடைபெறும் சூழ்நிலையில் குருவையா அதிகாலையில் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்குச் சென்று திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்று வேண்டி தனது கை விரலை துண்டித்து உள்ளார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து இருக்கன்குடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
  Published by:Sheik Hanifah
  First published: