முகப்பு /செய்தி /தமிழ்நாடு / துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புக்கு ஆசைப்பட்டு, ரவுடிகளை செட்டப் செய்த திமுக பிரமுகர் கைது

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புக்கு ஆசைப்பட்டு, ரவுடிகளை செட்டப் செய்த திமுக பிரமுகர் கைது

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புக்கு ஆசைப்பட்டு, ரவுடிகளை செட்டப் செய்த திமுக பிரமுகர் கைது

திருவள்ளூர் மாவட்டத்தில் திமுக பிரமுகர் தாக்கப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பிற்கு ஆசைப்பட்டு, கூலிப்படையை ஏவி கொலை வெறித் தாக்குதல் நடத்தும்படி திமுக பிரமுகர் ஆடிய நாடகம் அம்பலமாகியுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

திமுக பிரமுகர் கண்ணனின் கார் மர்ம நபர்களால் கடந்த டிசம்பர் 27ம் தேதி தாக்கப்பட்டது. காரில் இருந்த கண்ணன் ஓட ஓட விரட்டித் தாக்கப்பட்டார். கண்ணன் அளித்த புகாரில் அவரே தற்போது சிக்கியுள்ளார். 

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் தெற்கு ஒன்றிய திமுகச் செயலாளர் கருணாகரன். இவரது சகோதரர் 46 வயதான கண்ணன். திமுக பிரமுகரான இவர், டிசம்பர் 27ம் தேதி தனது காரில் திருநிலை கிராமத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பெரியபாளையம் - சென்னை நெடுஞ்சாலையில், கன்னிகைப்பேர் ஏரிக் கரை வளைவு அருகே, 2 இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் திடீரென வழிமறித்து கார் கண்ணாடிகளை பட்டாக்கத்தியால் உடைக்கத் தொடங்கினர்.

காரில் வந்த கண்ணனும் ஓட்டுநர் மணியும் இறங்கி தப்பியோடினர். இந்த சம்பவம் குறித்து கண்ணன், பெரியபாளையம் காவல்நிலையத்தில் புகாரளித்தார். போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், மாதவரத்தைச் சேர்ந்த 27 வயதான விவேக் என்ற லியோ விவேக், 23 வயதான கொளத்தூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சக்திவேல், 40 வயதான ஐசிஎப் டாக்டர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த யுவராஜ், 27 வயதான கொளத்தூரைச் சேர்ந்த ஹரிஹரன், 30 வயதான அயனாவரத்தைச் சேர்ந்த பாலாஜி ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் கண்ணனின் காரைத் தாக்கச் சொன்னது வழக்கறிஞர் ராஜா என்பது தெரியவந்தது. ராஜாவைப் பிடித்து விசாரித்தபோது அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. கண்ணன் தனக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். அதற்கு என்ன செய்ய வேண்டும் என வழக்கறிஞர் ராஜாவை அணுகிக் கேட்டபோது, அவர் தான் இந்தத் தாக்குதல் ஐடியாவைக் கூறியுள்ளார் என்பதும், அவரே கூலிப்படையை செட்டப் செய்தார் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க...உலக பிரபலமான 2009 இடைத்தேர்தல்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொகுதி - திருமங்கலம் தொகுதியை அறிவோம்

இதையடுத்து வழக்கறிஞர் ராஜாவையும் போலீசார் கைது செய்தனர். துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பிற்கு ஆசைப்பட்ட திமுக பிரமுகர், வழக்கறிஞரின் ஆலோசனையின் பேரில் தனது காரை கூலிப்படை ஆட்களை வைத்து அடித்து நொறுக்கிய நாடகம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Crime | குற்றச் செய்திகள், DMK, Thiruvallur