திருச்சியில் கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை! தி.மு.க நிர்வாகி உள்பட 3 பேர் கைது

Karthick S | news18
Updated: October 9, 2019, 12:26 PM IST
திருச்சியில் கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை! தி.மு.க நிர்வாகி உள்பட 3 பேர் கைது
மாதிரிப் படம்
Karthick S | news18
Updated: October 9, 2019, 12:26 PM IST
திருச்சி பொன்மலையில் கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டிய தி.மு.க இளைஞரணி நிர்வாகி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் ராஜிவ்காந்தி நகரைச் சேர்ந்த வீராசாமி என்பவருக்கு சொந்தமான வீட்டில், வாடகைக்கு வசிக்கும் வடமாநில பெண்ணுக்கும், அதேபகுதியைச் சேர்ந்த தி.மு.க இளைரணி நிர்வாகியான சுரேஷுற்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதையறிந்த வீராசாமி, வீட்டை காலி செய்யுமாறு வடமாநில பெண்ணிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து வீராசாமி வீட்டின் முன் தகராறு செய்தார். இதை தட்டிக்கேட்ட வீராசாமியின் மகன் கோபால்சாமியை அரிவாளால் வெட்டிய சுரேஷ், அங்கிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கினார்.


புகாரின்பேரில் மூன்று பேரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also see:

First published: October 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...