சேலம் உருக்காலை: ஸ்டாலின் கோரிக்கை - முதல்வர் உறுதி

இரண்டு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து பிரதமரை சந்தித்து சேலம் உருக்காலை தனியார் மயம் ஆக்கப்பட கூடாது என்று வலியுறுத்தலாம் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

சேலம் உருக்காலை: ஸ்டாலின் கோரிக்கை - முதல்வர் உறுதி
ஸ்டாலின் மற்றும் பழனிசாமி
  • News18
  • Last Updated: July 5, 2019, 2:19 PM IST
  • Share this:
சேலம் உருக்காலை தனியார் மயம் ஆக்கப்பட கூடாது என்று சட்டப்பேரவையில் திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்துள்ளது.

சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த திமுக தலைவர் ஸ்டாலின் சேலம் உருக்காலை ஏக்காரணத்தை கொண்டு தனியார் மயம் ஆகக்கூடாது என்றார்.  முதல்வர் பிரதமரை சந்தித்து அழுத்தம் தர வேண்டும் என்றும், தேவையெனில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடன் வந்து அழுத்தம் தர அனுமதி கொடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சேலம் உருக்காலை லாபகரமாக இயக்க வாய்ப்பு இருந்தும் போதும், SAIL நிறுவனம் பயன்படுத்தவில்லை என்றும் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.


அதனை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே முயற்சி எடுக்கப்பட்டு, அதை இந்த அரசு முறியடியடித்தது என்றார்.

தற்போது மீண்டும் டெண்டர் அறிவிப்பு வந்திருக்கிறது.
அதிமுக, திமுக  நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து பிரதமரை சந்தித்து சேலம் உருக்காலை தனியார் மயம் ஆக்கப்பட கூடாது என்று வலியுறுத்தலாம் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

Loading...

மேலும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரச்னைகளை எழுப்பலாம் என்றும்,  தனியார் மயமாக்கப்படுவதை தடுத்து நிறுத்த அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் என்றும் முதலமைச்சர் உறுதியளித்தார்.

Also see...

First published: July 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...