ஆளுநர் மாளிகை பொங்கல் விழா கிண்டி ராஜ் பவன் வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவை திமுக மற்றும் தோழமை கட்சிகள் புறக்கணித்தன.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு என்று அழைப்பதைவிட தமிழகம் என்பதே சரியாக இருக்கும் என பேசியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து சட்டப்பேரவையில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசு கொடுத்த உரையில் சில பகுதிகளை நீக்கியும் சேர்த்தும் வாசித்தார். இதனை அவைக்குறிப்பில் இருந்து நீக்க முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்தார். முதலமைச்சர் தீர்மானத்தை வாசிக்கும் போதே ஆளுநர் வெளியேறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து கவர்னர் மாளிகை சார்பாக பொங்கல் விழாவிற்கு அழைப்புவிடுக்கப்பட்டது. அதில் தமிழ்நாடு ஆளுநர் என்பதற்கு பதிலாக தமிழக ஆளுநர் என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் தமிழ்நாடு லட்சனையை தவிர்க்கப்பட்டு இந்திய லட்சனை மட்டுமே இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பொங்கல் விழாவிற்கு ஆளுநர் ஆர்.என் ரவி மற்றும் அவரது மனைவி லட்சுமி ரவி அழைத்து வரப்பட்டனர். வேஷ்டி - சட்டை, பரிவட்டம் அணிந்து ஆளுநர் ஆர்.என் ரவி பொங்கல் விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், விஜயபாஸ்கர், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஓ. பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வானதி சீனிவாசன், எம்.ஆர் காந்தி, மொடக்குறிச்சி சரஸ்வதி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் திமுக கூட்டணி கட்சியினரும் பங்கேற்கவில்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM MK Stalin, DMK, OPS - EPS, Pongal festival, RN Ravi, Tamilnadu