முகப்பு /செய்தி /தமிழ்நாடு / இபிஎஸ் ஆணவம்தான் ஈரோடு தோல்விக்கு காரணம்.. டிடிவி தினகரன் விமர்சனம்..!

இபிஎஸ் ஆணவம்தான் ஈரோடு தோல்விக்கு காரணம்.. டிடிவி தினகரன் விமர்சனம்..!

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

இடைத்தேர்தலில் இரட்டை இலை இல்லை என்றால் தோல்வியின் நிலை இதைவிட மிகவும் மோசமாகி இருக்கும் என டிடிவி தினகரன் கருத்து.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரை முதுகுளத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகன் மகள் திருமண விழா நிகழ்வில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்றார். அதன் பிறகு, மதுரை கோச்சடையில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,  “மருங்காபுரி, மதுரை கிழக்கு, R.K நகர் உள்ளிட்ட இடை தேர்தலில் தான் எதிர்கட்சிகள், சுயேச்சை என ஜெயித்தது. மற்ற இடைதேர்தல்களில் ஆளும் கட்சி தான் ஜெயித்தது. ஒரு வருட ஆட்சியில் மக்கள் திமுக மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். காரணம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தற்போதைய திமுக ஆட்சி மிகவும் மோசமான ஆட்சியாக உள்ளது. ஒரு வாக்களர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய்  வரை  செலவு செய்து உள்ளனர். ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் திமுகவிற்கு வாக்காளர்கள் வெற்றியளிக்கவில்லை, திமுக வெற்றியை வாங்கியுள்ளார்கள்.

எடப்பாடியின் ஆணவம், உடன் இருப்பவர்களின் மோசமான வழிகாட்டுதல்கள், தான் ஈரோடு கிழக்கு இடைதேர்தலின் தோல்விக்கு காரணம். இரட்டை இலை இல்லை என்றால் தோல்வியின் நிலை இதைவிட மிகவும் மோசமாகி இருக்கும்.

எனவே, வருங்காலத்தில் அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒன்றுபட  வேண்டும்.  அப்போது தான் தீய சக்தியான. திமுகவை வீழ்த்த முடியும். ஈரோடு கிழக்கு இடை தேர்தலில் தோல்வி என்பது, எடப்பாடியின் தோல்வி ஆகும். சில பொதுக்குழு உறுப்பினர்களை கையில் வைத்திருந்தால், எடப்பாடி பழனிசாமி உண்மையான தலைவராக விட முடியாது.

பழனிசாமியின் பிடியில் அதிமுக இருக்கும் வரை மோசமான சூழல் தான் நிலவும். தொண்டர்கள் சோர்வடைந்து உள்ளனர். எடப்பாடியிடம் இருந்து தொண்டர்கள் விலகி வர வேண்டும்” என தெரிவித்தார்.

First published:

Tags: ADMK, AMMK, Congress, DMK, Erode Bypoll, TTV Dhinakaran