Home /News /tamil-nadu /

Tamil Nadu Election 2021: மார்ச் 2 முதல் 6 வரை திமுக வேட்பாளர் நேர்காணல் - துரைமுருகன் அறிவிப்பு

Tamil Nadu Election 2021: மார்ச் 2 முதல் 6 வரை திமுக வேட்பாளர் நேர்காணல் - துரைமுருகன் அறிவிப்பு

அண்ணா அறிவாலயம்

அண்ணா அறிவாலயம்

நேர்காணலுக்கு வருபவர்கள் ஆதரவாளர்கள் மற்றும் பரிந்துரையாளர்களை அழைத்து வர அனுமதி இல்லை.

    சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட பலரும் விருப்பமனு அளித்துள்ள நிலையில், மார்ச் 2 முதல் மார்ச் 6 ஆம் தேதிவரை வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல், மாவட்ட வாரியாக மு.க. ஸ்டாலின் தலைமையில் நடத்தப்படும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 12ஆம் தேதி தொடங்குகிறது. தேர்தல் முடிவுகள் மே 2ஆம் தேதி அறிவிக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் நேற்று அறிவித்தார்.

    இந்நிலையில், துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மார்ச் 2-ம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதி வரை நேர்காணல் நடைபெறும். தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெறும்.

    Must Read: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு



    குறிப்பிட்ட தேதிகளில் குறிப்பிட்டுள்ள மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட கழக செயலாளர்கள்/ பொறுப்பாளர்கள் மட்டும் வர வேண்டும். நேர்காணலுக்கு வருபவர்கள் ஆதரவாளர்கள் மற்றும் பரிந்துரையாளர்களை அழைத்து வர அனுமதி இல்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Suresh V
    First published:

    Tags: DMK, Durai murugan, MK Stalin, TN Assembly Election 2021

    அடுத்த செய்தி