கடந்த சில நாட்களாக திமுகவில் தலைமை கழக நிர்வாகிகள், செயல் திட்டகுழு உறுப்பினர்கள் என பல்வேறு பொறுப்புகளுக்கான நிர்வாக பட்டியலை தலைமை கழகம் அறிவித்து வருகிறது.
அந்த வகையில் இன்று வெளியான அறிவிப்பில், செய்தி தொடர்பு, தீர்மான குழு, சொத்து பாதுகாப்பு, தேர்தல் பணிக்குழு, நெசவாளர் அணி, விவசாய அணி, தொண்டர் அணி, மீனவர் அணி, ஆதிதிராவிடர் நலக்குழு, கலை இலக்கிய குழு, இலக்கிய அணி, சிறுபான்மை அணி, வர்த்தக அணி, உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு நிர்வாகிகளை நியமித்து தலைமை கழகம் பெயர்களை வெளியிட்டுள்ளது.
"தலைமைக் கழக நிர்வாகிகள் பட்டியல்"
- தலைமைக் கழகம் அறிவிப்பு#DMK
1/3 pic.twitter.com/lrLdg1pu3h
— DMK (@arivalayam) November 28, 2022
அந்த பட்டியலின் படி, செய்தி தொடர்பு தலைவராக டி.கே.எஸ் இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார். செய்தி தொடர்பு துணைதலைவர்களாக பி.டி அரசகுமாரும், ஆண்டாள் பிரியதர்ஷினியும் நியமிக்கப்பட்டுள்ளனர். செய்தி தொடர்பு செயலாளராக பேராசிரியர் கான்ஸ்டண்டைன் ரவீந்திரன், செய்தி தொடர்பு இணை செயலாளர்களாக தமிழன் பிரசன்னா, சிவ. ஜெயராஜ், கவிஞர் சல்மா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க : இந்தியாவுக்கு சீன ராணுவம் செய்ய முடியாத சேதத்தை பாஜக அரசு செய்துள்ளது - ராகுல் விமர்சனம்
மேலும், தேர்தல் பணிக்குழு தலைவர்களாக ராஜ கண்ணப்பன், ப. ரங்கநாதன் ஆகியோரும், சொத்து பாதுகாப்பு குழு செயலாளராக பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனும், வெளியீட்டு செயலாளர்களாக திருச்சி செல்வேந்திரனும், விடுதலை விரும்பியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல, கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவைத் தலைவராக வாகை சந்திர சேகரும், துணை தலைவராக தமிழச்சி தங்கப்பாண்டியன், எம்.ஆர்.ஆர். வாசு விக்ரம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இலக்கிய அணி செயலாளராக வி.பி.கலைராஜனும், சிறுபான்மையின் நல உரிமை பிரிவு தலைவராக டி.பி.எம். மைதீன்கானும், சிறுபான்மையின நல உரிமை பிரிவு செயலாளராக டாக்டர் மஸ்தானும், விவசாய அணி தலைவராக என்.கே.கே பெரியசாமியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: DMK, DMK cadres, DMK party, Minister Palanivel Thiagarajan