நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம் - தி.மு.க தேர்தல் வாக்குறுதி

நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம் - தி.மு.க தேர்தல் வாக்குறுதி

கோப்பு படம்

நகரப் பேருந்துகளில் மகளிருக்கு டிக்கெட் கட்டணம் கிடையாது என்று தி.மு.க வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  தி.மு.க சார்பில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தி.மு.க வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் 500 வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. திருக்குறளை தேசிய புத்தமாக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும், அமைச்சர்கள் லஞ்சம் குறித்து விசாரிப்பதற்கு தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்ப்பட்டுள்ளன. அதேபோல, மாற்றுத்திறனாளிகள் சட்டத்தின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான கொள்கைகளை உருவாக்கவும், அவற்றைச் செயல்படுத்துவதைத் கண்காணிக்கவும், மாநிலங்கள் தோறும் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படவேண்டும்.

  ஆனால், சட்டப்படியான இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற கடந்த ஐந்து ஆண்டுகளாக அ.தி.மு.க ஆட்சியில் குழு அமைக்கப்படவில்லை. தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படுவதோடு, அரசு வழங்கும் சலுகைகளை அதிகமானவர்கள் பெற்றுப் பயனடையும் வகையில் மாற்றுத் திறனாளிகள் சலுகைக்கான குறைபாடுகளை 60 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

  மாற்றுத்திறனாளிகளுக்கும், அவர்களுடன் செல்லும் ஓர் உதவியாளர்களுக்கும் தமிழக அரசின் சாதாரண பேருந்துகளில் கட்டணமில்லா பயணச் சலுகை வழங்கப்படும். அதேபோல, நகர்புற, கிராமப் புற அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து வசதி வழங்கப்படும்’ என்று தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: